Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த 3 பேருக்கும் பிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதியே இல்ல.. குறும்படத்தால் அம்பலமான அர்ச்சனாவின் உண்மையான முகம்!
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தினம்தோறும் விஜய் டிவியில் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகிறது.
ஆனால் ஒரு நாள் முழுவதும் நடக்கும் நிகழ்ச்சியை ஒரு மணி நேரத்தில் மிகக் குறைந்த விஷயத்தை மட்டுமே மக்களிடம் கொண்டு சேர்க்கும் நிலை உள்ளதால், அன்சீன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
அப்படித்தான் சம்யுக்தாவும் அர்ச்சனாவும் நடுராத்திரியில் பேசிக்கொண்டிருக்கும் குறும்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஏனென்றால் இதில் சம்யுக்தா, பெயரைக் குறிப்பிடாமல் மூன்று பேரை சொல்லி அவர்களுக்கு இந்த பிக்பாஸ் வீட்டில் இருக்கும் தகுதி கொஞ்சம் கூட இல்லை என்று விமர்சித்துள்ளார்.
அதாவது இந்த மூன்று பேரும், வேல்முருகன் எலிமினேட் ஆவதற்கு முன்பே பிக்பாஸ் வீட்டை விட்டு சென்றிருக்க வேண்டும் என்று அர்ச்சனாவிடம் சம்யுக்தா விவாதித்துள்ளார்.
மேலும் அர்ச்சனா, ‘இவங்கள சொன்னதுக்கு எல்லாம் நான் கவலைப்படல. ஆனால் தகுதி இல்லாத இவங்கல்லாம் என்ன சொல்றாங்களே!’ என்று சம்யுக்தாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
எனவே இவர்கள் இருவரும் பேசிக் கொண்டதை வைத்து பார்க்கும் போது அனிதா, ஆரி, சனம் ஷெட்டி ஆகிய மூவரையும் தான் சம்யுக்தா குறிப்பிடுகிறார் என்பதை பிக்பாஸ் ரசிகர்கள் புரிந்து கொண்டனர்.
முழு குறும்பட வீடியோ பார்க்க: Click Here

bigg-boss-tamil
