Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் சீசன்-4ல் யாருக்கு எந்த இடம்னு தெரியுமா? இறுதி சுற்று முடிவு இதோ
விஜய் டிவியில் 100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது, இன்னும் ஒரு சில தினங்களில் நிறைவடைய உள்ள நிலையில் யார் வெற்றியாளர் என்பதை அறிந்துகொள்வதற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.
இந்நிலையில் ஆரி தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் என்ற தகவல் தற்போது இணையத்தில் கசிகிறது. ஏனென்றால் ஆரிக்கு தான் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் ஓட்டுக்களை எக்கச்சக்கமாக போட்டு குவிக்கின்றனர்.
அதேபோல் பாலா இரண்டாவது இடத்தையும், ரியோ 3வது இடத்தையும் பிடித்துள்ளார். மேலும் ரம்யா பாண்டியன் 4-வது இடத்தை வகிக்கிறார். சோம் சேகர் கடைசி இடமான 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

bb4-cinemapettai
எனவே பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி கள நிலவரங்கள் பற்றிய தகவல் தற்போது சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது.
