Tamil Cinema News | சினிமா செய்திகள்
வேறு ஒன்றை நீட்டி பேசிடுவேன், நீ ஆம்பளன்ன செஞ்சு பாரு.! ரணகளமான பிக் பாஸ் வீடு!
கடந்த சில நாட்களாக கொண்டாட்டத்திற்கும் ஆரவாரத்திற்கும் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது ரசிகர்களை மென்மேலும் குஷிப்படுத்தி வருகிறது.
எனவே நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் காரசாரமான விவாதம் போட்டியாளர்களுக்கு இடையே நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த வாரம் ரியோ பிக்பாஸ் வீட்டின் தலைவராக பதவியேற்றது, ஆரி விட்டுக் கொடுத்ததால் தான் என தவறான தகவலை ஆரி பதிவிட்டதே பிக்பாஸ் வீட்டில் பெரும் கலவரத்திற்கு காரணமானது.
ஏனென்றால் ரியோ தனது கடுமையான முயற்சியால் தான், பிக்பாஸ் வீட்டின், தலைவருக்கான போட்டியில் வெற்றி பெற்றார் என்பது பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே.
ஆனால் இதற்கு முரணாக ஆரி, ‘போட்டியில் வெற்றி பெற்ற ரியோ, எப்படி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவராக செயல்படுவார் என்பதை உன்னித்து கவனிப்பதற்காக தான், நான் இந்த போட்டியை ரியோவுக்கு விட்டுக் கொடுத்தேன்’ என்று பெருமை பேசியிருக்கிறார்.
இதையெல்லாம் பார்த்து பொறுத்துக் கொள்ளாத பாலாஜி, ரம்யா பாண்டியன் எதிர்த்து பல கேள்விகளை முன்வைத்தனர்.
அதன்பின் பாலாஜியை கைநீட்டி பேசிய ஆரியை கண்டிக்கும் விதமாக, ‘கையை இறக்கிப் பேசுங்க, இல்லைன்னா நான் வேறு ஒன்றை நீட்டி பேசிடுவேன்’ என பாலாஜி சொன்னதற்கு, ‘நீ ஆம்பளைன்னா பண்ணிப்பாரு’ என்று ஆரி மேலும் சண்டையை சூடுபிடிக்க வைத்தார்.

aari-cinemapettai
எனவே ஆரியின் இந்த செயல் சக போட்டியாளரை மட்டுமல்லாமல் பிக்பாஸ் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
