fbpx
Connect with us

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுபவர் இவரா.? பரபரப்பான ஓட்டிங் லிஸ்ட்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுபவர் இவரா.? பரபரப்பான ஓட்டிங் லிஸ்ட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரம்மாண்டமான பொழுதுபோக்கு நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 4.

இந்த சீசனில் முதல் நபராக நடிகை ரேகா, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதன்பின் சென்ற வாரத்தில் அஜித் தனது ஃப்ரீ பாஸ் டிக்கெட்டை வைத்தே எலிமினேஷனிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.

அதேபோல் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு யார்  வெளியேற்றப்படுவார்கள் என்று ரசிகர்கள் இணையத்தின் வாயிலாக எடுக்கப்பட்ட ஓட்டிங் லிஸ்ட் தற்போது சமூக வலைதளங்களில்  வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வார எவிக்ஷன் லிஸ்டில் சோம் சேகர், வேல் முருகன், நிஷா ரியோ, அனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, ரம்யா பாண்டியன், ரமேஷ், சனம் ஷெட்டி, பாலாஜி ஆகிய 11 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

bb4-voting-list-cinemapettai

bb4-voting-list-cinemapettai

 

இவர்களுள் வேல் முருகனுக்கே குறைவான ஓட்டு பதிவாகியுள்ளது. ஏனெனில் மற்ற போட்டியாளர்களை விட வேல்முருகன் ரசிகர்களின் மனதில் இடம்  பிடிக்காமல் போய் விட்டதாக தெரிகிறது.

இருப்பினும் பாலாஜி முருகதாஸுக்கு ரசிகர்கள் தங்கள் ஓட்டுகளை குவித்துள்ளனர். ஒத்த ஆளா கெத்தா, பிக்பாஸ் வீட்டில் சுற்றி திரியும் பாலாஜிக்கு பிக்பாஸ் ரசிகர்கள் தங்களது ஆதரவை தாராளமாக கொடுத்து வருகின்றனர்.

velmurugan-cinemapettai

velmurugan-cinemapettai

மேலும் சிலர் சமூக வலைதளங்களில் பாலாஜி தான் இந்த சீசனின் வெற்றியாளர் என்றும் தங்கள் கமெண்ட்டுகளை பதிவிடுகின்றனர்.

இருப்பினும்  விஜய் டிவியின் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையிலேயே இந்த வாரம்  பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுபவர் யார் என்று உறுதியாகத் தெரியவரும்.

 

Continue Reading
To Top