Tamil Cinema News | சினிமா செய்திகள்
நிஷா, ஜெயிலுக்கு போக கூடாதுன்னு அர்ச்சனா செய்த கேவலமான செயல்.. ஒத்து ஊதிய சோம் சேகர்!
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வார இறுதியில் சுவாரசியம் குறைந்த போட்டியாளரை தேர்வு செய்து அவர்களை ஜெயிலில் அடைப்பார்கள்.
எனவே இந்த வாரம் சுவாரசியம் குறைந்த போட்டியாளராக ரியோ மற்றும் ஆரியை தேர்வு செய்து அவர்களை ஜெயிலில் அடைத்தார்கள்.
ஆனால் ரியோ மற்றும் ஆரியைவிட நிஷாவிற்கு தான் அதிக ஓட்டுகள் கிடைத்தது.
ஏனென்றால் நிஷா தம்பி தம்பி என பாசமாக அழைத்த ரியோவும், அர்ச்சனா, சோம் சேகர் ஆகியோர் சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளராக நிஷாவைதான் தேர்ந்தெடுத்தனர்.
முடிவாக யாருக்கு அதிக ஓட்டு என கணக்கிடும்போது, நிஷாவிற்கு ஓட்டு போட்ட சோம் சேகர், அர்ச்சனா ஆகியோர், ‘நிஷாவை காப்பாற்றுவதற்காக யார் யார் நினைக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு சோம் சேகர், அர்ச்சனா கை தூக்கிய கேவலமான செயலை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

archana1-cinemapettai
எனவே பிக் பாஸ் வீட்டில் குரூப்பிசம் இருப்பது உண்மைதான் என்பது நேற்றைய நிகழ்ச்சியின் மூலம் தெள்ளத்தெளிவாக தெரிந்தது.
