Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பாதியில் களமிறங்கும் பிரபல முன்னணி நடிகை.. இது என்ன புது ட்விஸ்ட்?
தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி செம விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
முதலில் ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நிகழ்ச்சியாக மாறிவிட்டது.
அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் தற்போது ஒரே சமயத்தில் நான்காவது சீசன் சென்று கொண்டிருக்கிறது.
தமிழுக்கு முன்னரே தெலுங்கில் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் பிரபல நடிகர் நாகார்ஜுனா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
இந்நிலையில் திடீரென அவருக்கு படப்பிடிப்புக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் இன்னும் சில வாரத்திற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்ற மாட்டார் என தெரிகிறது.
இந்நிலையில் மாமனார் விட்டுச்சென்ற இடத்தை பூர்த்தி செய்ய மருமகளான சமந்தா தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாராம்.
என்ட்ரி ஆன முதல் நாளே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகளை கட்டி விட்டது. ஆனால் தமிழில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வருடம் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்று.

samantha
