Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் 4வது சீசனை கைப்பற்ற போகும் பிரபல தொலைக்காட்சி.. கமலஹாசனும் இல்லை
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ், விஜய் டிவியின் மூலம் 3 சீசன்களை வெற்றிகரமாக நடத்தி உள்ளது. இதனால் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்து உள்ளது என்றே கூறலாம். இந்த 3 சீசனிலும் கமலஹாசன் தொகுத்து வழங்கினார் இதற்காக கோடிகளில் சம்பளம் வாங்கி உள்ளார்.
தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 4 தொகுத்து வழங்கப் போவதில்லை என்ற செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி ஈவிபி ஸ்டுடியோவில் வைத்துதான் நடைபெற்று வந்துள்ளது.
‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது, அதில் இரவில் நடக்கும் சண்டைக் காட்சிக்காக நாசரேத் பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் ராட்சத கிரேனில் லைட் செட் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்த பொழுது கிரேன் அறுந்து விழுந்து கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணா உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த நிகழ்வு தமிழ் சினிமாவில் உலுக்கி எடுத்தது என்றே கூறலாம், இதனால் கமலஹாசன் இனிமேல் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடிக்கப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் செட் அதே ஸ்டுடியோவில் தான் இதுவரை போட்டுள்ளனர், இந்த நிலையில் கமலஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இதனுடன் சேர்ந்து விஜய் டிவி மற்றும் கலர்ஸ் டிவி கிடையே பிக்பாஸ் 4வது சீசனை நடத்துவதற்கு பெரும் போட்டி நிலவி வருகிறது. ஏற்கனவே டிஆர்பியில் சன் டிவியை விட பின்தங்கியுள்ள விஜய் டிவி இந்த நிகழ்ச்சியும் போய்விட்டாள் ரசிகர்கள் கூட்டம் குறைந்து விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
இந்த சீசனை நடத்துவதற்காக விஜய் டிவி ஏற்கனவே போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் இறங்கியதாகவும், தொகுத்து வழங்குவதற்காக நடிகர் சிம்புவிற்கு அழைப்பு சென்றிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் கமலஹாசன் தொகுத்து வழங்குவதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் கமலஹாசனின் தலைமையில் நடக்குமா விஜய் டிவி அதை நடத்துமா என்பது கேள்விக்குறியாகி விட்டது.
