fbpx
Connect with us

அனிதாவை மேடையிலேயே வச்சு செஞ்ச பிக்பாஸ் பிரபலம்.. பேசிய பிளேடு போடுறா.. கடுப்பான ரசிகர்கள்!

anitha-sampath-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அனிதாவை மேடையிலேயே வச்சு செஞ்ச பிக்பாஸ் பிரபலம்.. பேசிய பிளேடு போடுறா.. கடுப்பான ரசிகர்கள்!

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன்4.

இந்த நிகழ்ச்சி நாள்தோறும் சுவாரசியம் குறையாமல் அனுதினமும் மக்களை பார்க்க தூண்டுகிறது.

அந்தவகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அனிதாவை மேடையிலேயே வச்சு செஞ்சுட்டாங்க சம்யுக்தா.

ஏனெனில் நேற்று ‘சொன்ன கதை சோக கதை’ டாஸ்கின் மூலம் ஒவ்வொருவரும் தாங்கள், மிஸ் பண்ற நபரைப் பற்றி பேச வேண்டும் என்று பிக்பாஸ் கூறியிருந்தார்.

அப்போது அனிதா டர்ன் வந்தபோது வழக்கம்போல் அவங்க
கணவன் பற்றியும், அம்மா அப்பா பற்றியும் படபடவென பொரிந்து தள்ளிவிட்டார்.

அந்த சமயத்தில் மற்ற ஹவுஸ் மேட்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது.

அப்போது சம்யுக்தா மட்டும் அனிதாவிடம் “இடையில் குறுக்கிடுவதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள், ரொம்ப லாங்கா போகுது” என்று அனிதாவின் பேச்சுக்கு முடிவு கட்டினார்.

அதுக்கப்புறம் அனிதா, இந்த வீட்ல என்ன பேசவே விட மாட்டாங்க என்று கதற ஆரம்பிச்சாங்க.

எனவே கண்டிப்பா இந்த பிரச்சனையை வைத்து இந்த வார இறுதியில் கமல் பஞ்சாயத்து பண்ணுவார் என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

Continue Reading
To Top