fbpx
Connect with us

Cinemapettai

இந்த மாதிரி ஒரு கேவலமான ப்ரோமோ வீடியோவை பார்த்ததே இல்லை.. பிக்பாஸை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த மாதிரி ஒரு கேவலமான ப்ரோமோ வீடியோவை பார்த்ததே இல்லை.. பிக்பாஸை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்

தமிழ் தொலைக்காட்சியின் மிக முக்கியமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக கருதப்படுவது பிக்பாஸ். இதன் நான்காவது சீசன் இன்னும் சில வாரங்களில் துவங்க இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி விஜய்டிவியின் டிஆர்பியை தெறிக்கவிட்ட நிகழ்ச்சி தான் இந்த பிக்பாஸ்.

தற்போது அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.ஆனால் தமிழகத்தில் மட்டும் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பது தமிழ் மக்களிடையே பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை தமிழில் 2 புரோமோக்கள் வெளியான நிலையில் ரசிகர்கள் அனைவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் துவங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

மேலும் இந்த சீசனில் ஷிவானி நாராயணன், VJ அர்ச்சனா, ரியோ ராஜ், அனுமோகன், ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன் என பலர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

மேலும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பிக்பாஸ் சீசன் துவங்கும் என்ற செய்தி பரவலாக பேசப்படுகிறது. இது ஒரு புறமிருக்க இன்று பிக் பாஸ் 4ன் புதிய புரோமோ வெளியாகியுள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த புரோமோவை ஆர்வத்துடன் பார்க்க, இதில் வந்ததோ அனைத்து ரசிகர்களையும் மிகவும் வெறுப்பேற்றி உள்ளது.

அப்படி அந்த ப்ரோமோவில் என்ன இருந்தது என்றால் விஜய் டிவியின் பிரபலங்கள் அனைவரும் சேர்ந்து கொரோனா நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் கிருமிநாசினி, முக கவசம் அணிவது, பிக்பாஸ் டோனுக்கு நடனமாடுவது போன்ற காட்சிகள்தான். ஆவலுடன் இருந்த ரசிகர்களை ஏமாற்றியுள்ளது இந்த புரோமோ வீடியோ.

இதைவிட இந்த வீடியோவின் இறுதியில் வழக்கம்போல பிக்பாஸ் துவங்கும் தேதி அறிவிக்கப்படாமல் விரைவில் என்று போட்டு முடித்து விட்டார்கள் நிகழ்ச்சியின் குழுவினர். இதைக் கண்டு ரசிகர்கள் அனைவரும் இன்னும் எத்தனை நாளைக்கு தான் விரைவில் போடுவீங்கன்னு கடுப்பாகி இருக்காங்க. ஆனால் இதற்கு அடுத்த வீடியோவில் தேதி OCT 4, 6 மணிக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
To Top