Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் போட்டியாளர்களில் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி! இதுகளும் சதி பண்ணுதே என கவலையில் உலகநாயகன்
மக்கள் அதிகம் விரும்பி பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்றாகும். கடந்த மூன்று சீசன்களில் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது.
உலகநாயகன் கமலஹாசன் நான்காவது சீசனையும் தொகுத்து வழங்க போவது சந்தேகம்தான் என்று கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து 2 புரோமோகளை கமலஹாசனே வெளியிட்டு அந்த சந்தேகத்தை தீர்த்துவைத்தார்.
முந்தைய சீசன்களில் இருந்த போட்டியாளர்களின் எண்ணிக்கையை இருபதிலிருந்து 16க்கும், போட்டிக்கான கால அளவை 100 நாட்களில் இருந்து 80 நாட்களுக்கு குறைத்து, புது புது மாற்றங்களை சீசன் 4-ல் கொண்டு வந்தது விஜய் டிவி நிர்வாகம்.
தற்போது விரைவில் நிகழ்ச்சி தொடங்கலாம் என்ற முடிவில் போட்டியாளர்களை முன்பே தனிமைப்படுத்தும் ஏற்பாட்டை செய்தபோது நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த போட்டியாளர் இருவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கு, ஹிந்தி போன்ற பிக்பாஸ் நிகழ்ச்சிகள் எல்லாம் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், தமிழிலும் பிக் பாஸ் சீசன் 4- ஐ கூடிய விரைவில் ஒளிபரப்பு செய்துவிடலாம் என்று மும்முரமாக அனைத்து வேலைகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இந்த நிலையில் கண்டஸ்டன்ட்ஸ்களுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டிருப்பது ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இருக்கும் சூழ்நிலையை பார்த்தால் பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இன்னும் காலதாமதம் ஏற்படும் என்று பலர் தரப்பில் கணிக்கப்படுகிறது.
ஏற்கனவே கமல் நடிக்க இருந்த படங்களின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி தாமதம் ஏற்படுவது அவருக்கு பெரும் சங்கடத்தை கொடுத்துள்ளதாம்.
