Tamil Cinema News | சினிமா செய்திகள்
கொரோனா பாதிப்பால் ஆட்டத்தை குறைத்துக்கொண்ட பிக் பாஸ் சீசன் 4.. சம்பவம் செய்ய காத்திருக்கும் ரசிகர்கள்
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் அடுத்த மாதம் 10 தேதி தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனவின் அச்சுறுத்தல் ஒருபுறம் இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பிக்பாஸ் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக ஒவ்வொரு போட்டியாளர்களையும் தனிமைப்படுத்தப்பட்டு, அதற்குப் பின்னர் தான் பிக் பாஸ் வீட்டில் அனுப்பி வைக்கின்றனர். யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற 11 பேர் கொண்ட லிஸ்ட் வெளியானது. இதைக் கேட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
கொரோனவின் பாதிப்பு இருப்பதால் போட்டிகளில் ஒரு சில மாற்றங்களை விஜய் டிவி அறிமுகப்படுத்தியுள்ளது, அதாவது 16 பேர் கொண்ட போட்டியாளர்களை குறைத்துக்கொண்டு 12 போட்டியாளர்களை மட்டுமே களமிறங்கியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் 100 நாட்கள் நடைபெறும் போட்டியின் நாட்களை குறைத்து 80 நாட்களில் முடித்து விட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். கமலஹாசனின் தலைமையில் சீசன் நான்கின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.
நேற்றைய தினம் ஐபிஎல் மேட்ச் கோலாகலமாக தொடங்கியது, அதேபோல் இந்த நிகழ்ச்சிக்கும் தமிழக ரசிகர்கள் மத்தயில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்களின் முழு விவரம் ஷாலு ஷம்மு, சனம் ஷெட்டி, கிரன் ரதொட், அமிர்தா ஐயர், சிவானி நாராயணன், ரியோ ராஜ், அமுதவாணன், கரூர் ராமன், புகழ், பாலாஜி முருகதாஸ் , ஆர் ஜே வினோத்.
