Connect with us
Cinemapettai

Cinemapettai

bigboss-sandy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு பதிலாக புது போட்டியாளரை களமிறக்கும் பிக் பாஸ்.. அடுத்த சாண்டி இவர்தான்!

ஹிந்தி, தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிகளெல்லாம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக கொஞ்சம் காலதாமதமாகிறது.

அக்டோபர் 4ஆம் தேதி அல்லது 11ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பை விஜய் டிவி நிர்வாகம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்காக போட்டியாளர்களை தனிமைப்படுத்திய போது, இரு போட்டியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இன்னும் காலதாமதம் ஏற்படும் என்று ரசிகர்களின் மத்தியில் எரிச்சல் ஏற்பட்டது.

தற்போது அந்த இரு போட்டியாளர்களை விலக்கி புதிதாக இரண்டு போட்டியாளர்களை களமிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர்கள் யாரென்றால், 80களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த நடிகர் சுரேஷ் தான். இவர் தற்போது ஒரு சில படங்களில் அப்பாவாக நடித்து வருகிறார்.

சுரேஷ் பிக்பாஸில் போட்டியாளராக தேர்ந்தெடுத்திருப்பது, ரசிகர்களிடையே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இரண்டாவது நபர் யார் என்றால், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் அர்ச்சனா. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் சிரித்த முகத்துடன் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவுக்கு என்டர்டைன்மென்ட் செய்வதில் கெட்டிக்காரர். முந்தைய சீசனில் சாண்டி இருந்தது போல இந்த சீசனில் அர்ச்சனா இருப்பார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

எனவே இந்த சீசனில் பல பிரபலங்கள் களமிறங்கி உள்ளதால், யாருக்கு சப்போர்ட் செய்வது, யாருக்கு ஆர்மி ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் மூன்றாவது புரோமோவை இன்னும் ரிலீஸ் செய்யாததால், விஜய் டிவியின் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் விழி மேல் விழி வைத்து காத்து வருகின்றனர்.

Continue Reading
To Top