Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடுத்த வாரத்திற்கான பிக் பாஸ் எலிமினேஷன் லிஸ்ட் ரெடி.. அந்த ஒரு விஷயத்தால் தப்பிச்ச மொட்ட அங்கிள்!
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த எலிமினேஷன் ரத்து செய்யப்பட்டது.
அதையடுத்து சென்ற வாரம் நடைபெற்ற ‘கடந்து வந்த பாதை’ என்ற டாஸ்கிங் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சனம் ஷெட்டி, ஆஜித், கேப்ரில்லா, ஷிவானி, சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி, ரேகா, ரம்யா பாண்டியன் ஆகிய 8 பேரும் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றனர்.
அவர்களில் இருந்து நேற்று ஒவ்வொருவரும் இரண்டு பேரை தேர்வு செய்து இந்த வாரத்திற்கான எவிக்ஷன் புராசசை தொடங்கியுள்ளனர்.
இதில் சனம் செட்டி 11 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரை தொடர்ந்து ஷிவானி-6, சம்யுக்தா-5, ரேகா-4 ஓட்டுக்களையும் பெற்றுள்ளார்.
அதேபோல் கேப்ரில்லா, ஆஜித் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் தலா 2 ஓட்டுகளை பெற்று எவிக்ஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த லிஸ்டில் மொட்ட பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி மட்டும் இடம் பெறவில்லை ஏனென்றால் இந்த வாரத்தில் அவர்தான் கேப்டன் என்ற ஒரே காரணத்தினால் எவிக்ஷன் புராசஸில் இருந்து தப்பித்துள்ளார்.
இந்த எவிக்ஷன் லிஸ்ட்டில் இருக்கும் பெரும்பாலானோருக்கு ரசிகர் பட்டாளம் இருப்பதால் யார் எலிமினேட் ஆவார் என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள்.
அதற்கேற்றார்போல் ரசிகர்களும் அவர் அவர்களுக்குப் பிடித்தமான போட்டியாளர்களுக்கு நேற்று முதல் இருந்தே ஓட்டுப்போட தொடங்கிவிட்டனர்.

mottai-uncle
