Sports | விளையாட்டு
பிகில் பிரபலத்தை களமிறக்கும் பிக் பாஸ் சீசன் 4.. இப்பவே ஆர்மி தொடங்க அலைமோதும் ரசிகர்கள்
பரபரப்பான சூழ்நிலையில் அடுத்த மாதம், ரசிகர்களை மூளை சலவை செய்யும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருப்பதாக உறுதி செய்துள்ளனர். போட்டியாளர்களை தேர்வு செய்வது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்று அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறது விஜய் டிவி.
போட்டியாளர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதற்குப்பின் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். போட்டியாளர்களை பற்றி எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.
ஆனாலும் நம்ப தகுந்த வட்டாரங்களின் மூலம் ஒரு சில தகவல்கள் கசிந்துள்ளது, பிகில் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த அமிர்தா ஐயர் பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்கிறார். இவர் தமிழில் தெனாலிராமன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், அதற்குப் பின்னர் படைவீரன், காளி, தெறி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்த வருடம் கவினுக்கு ஜோடியாக லிப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். தேத்து பல் அழகுடன் வலம் வர இருக்கும் அமிர்தாவின் அழகை ரசிப்பது மட்டும் இல்லாமல் அவருக்கு ஆர்மி தொடங்க ஆலோசித்து வருகின்றனர். IPL போலவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் தான்.
கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே அரைகுறை ஆடைகள் பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பார்க்கும் இது போன்ற நிகழ்ச்சியில் கவர்ச்சி ஆடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டியது அவசியம் தான்.
