Videos | வீடியோக்கள்
‘பிக்பாஸ் 2’ தெலுங்கு பதிப்பை தொகுத்து வழங்கப்போவது யார் தெரியுமா ? வெளியானது டீசர் !
வெளிநாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சியின் தழுவல் தான் “பிக் பாஸ்”. முன்பே ஹிந்தியில் இந்த ப்ரோக்ராம் வெளியாகி ஹிட் ஆனது. எனினும் இந்த ரியாலிட்டி ஷோ நம் தென்னிந்தியா வந்தது 2017 இல் தான்.

biggboss
நம் தமிழில் கமல் வழங்க, ஓவியா, ரைசா, ஹரிஷ் கல்யாண், சுஜா, ஸ்நேஹன் போன்றவர்கள் உச்சத்தை தொட. இந்நிகழ்வு ஸ்டார் விஜயில் ஒளிபரப்பானது.
பிக் பாஸ் தெலுங்கு
தெலுங்கிலும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ‘ஸ்டார் மா’ சேனலில் ஒளிபரப்பானது. இதனை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். இந்த ‘பிக் பாஸ்’ சீசன் 1-ல் நடிகர் சிவ பாலாஜி வெற்றி பெற்றார். தற்போது, ‘பிக் பாஸ்’ சீசன் 2 பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

nani
சீசன் 2-வை ஜூனியர் என்.டி.ஆருக்கு பதிலாக தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நான் ஈ படப்புகழ் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி தொகுத்து வழங்கவிருக்கிறார்.
. @StarMaa welcomes @NameisNani as the host for #BiggBossTelugu2 👁 We wish you a BIGG success 👍 pic.twitter.com/VMx9V7Th4R
— STAR MAA (@StarMaa) May 18, 2018
மேலும் இதன் டீசரும் வெளியாகி உள்ளது. விரைவில் இதில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்களின் பட்டியல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
