பிக்பாஸ் OTT துவங்கப்படுவது எப்போது தெரியுமா.? எதிர்பார்ப்பை கிளப்பிய ஹாட்ஸ்டார்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது நான்கு சீசன்களை நிறைவடைந்து, ஐந்தாவது சீசனானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எனவே இன்னும் மூன்றே வாரத்தில் பிக்பாஸ் சீசன்5 முடிவடைவதால் அடுத்த சீசனை கையோடு துவங்க உள்ளது.

ஆனால் அடுத்த சீசனான பிக் பாஸ் ஆனது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. எனவே 42 நாட்கள் நடைபெறும் இந்த பிக் பாஸ் OTT நிகழ்ச்சியில் 12 போட்டியாளர்கள் பங்குபெற உள்ளனர்.

இந்தப் 12 போட்டியாளர்களும் புதிய போட்டியாளர்களாக இல்லாமல் இதுவரை நடந்த நடந்து முடிந்த ஐந்து சீசனில் யார் சுவாரசியம் மிகுந்த நபராக இருந்தார்களோ அவர்களைத் தேர்ந்தெடுத்து பிக் பாஸ் OTT நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க உள்ளனர்.

குறிப்பாக ஓவியாவிடம் பிக் பாஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர் கண்டிப்பாக பிக் பாஸ் OTT நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. அத்துடன் இதுவரை நடந்த ஐந்து சீசன்களில் யார் வெற்றி பெற்றார்களோ, அவர்கள் பிக் பாஸ் OTT நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது.

மேலும் பிக் பாஸ் OTT நிகழ்ச்சியானது வரும் ஜனவரி 23ஆம் தேதி துவங்கவுள்ளது. இன்னும் சில தினத்தில் புத்தாண்டு துவங்க உள்ளது மட்டுமல்லாமல் அதே ஜனவரி மாதத்தில் பிக் பாஸ் OTT நிகழ்ச்சியும் துவங்கப்பட உள்ளது ரசிகர்களுக்கு கிடைத்த டபுள் ட்ரீட்.

ஆகையால் ரசிகர்கள் நீண்ட நாளாக எதிர்பார்ப்பு பிக் பாஸ் OTT நிகழ்ச்சி அடுத்த மாதமே ஆரம்பிக்க உள்ளதால் போட்டியாளர்களை பற்றிய முழு விபரமும் அதற்கான ப்ரோமோவும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்