13 போட்டியாளர்களுடன் OTTயில் நேரடியாக வெளிவர உள்ள பிக் பாஸ்.. விஜய் டிவிக்கு வச்ச ஆப்பு

மக்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து ஐந்தாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. எனவே நாற்பது நாட்களை கடந்த பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சி இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவடைய உள்ளதால் அடுத்த சீசனுக்கான அப்டேட் இணையத்தில் தாறுமாறாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் சீசன்6 இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது. ஏனென்றால் இதுவரை விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியானது அடுத்த சீசனை ஓடிடி தளத்தில் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

அதுமட்டுமின்றி புதிதாக போட்டியாளர்களை தேர்வு செய்யாமல், ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் யார் யார் சுவாரசியம் குறையாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு சென்றார்களோ அவர்களில்  13 பேரை தேர்வு செய்து, 42 நாட்கள் ஒளிபரப்பு செய்ய உள்ளது. எனவே பிக் பாஸ் சீசன்6 வரும் ஜனவரி மாதத்தின் இறுதியில் துவங்க உள்ளது.

அத்துடன் இதுவரை நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன்களை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமலஹாசன் அல்லது சிம்பு இவர்கள் இருவரும் ஒருவர் பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிக வாய்ப்பிருக்கிறது.

ஆகையால் பல்வேறு மாற்றங்களை கொண்ட பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியை ஹாட்ஸ்டாரில் மட்டுமே பார்க்க முடியும். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி வைத்து குளிர் காய்ந்த விஜய் டிவிக்கு பிக்பாஸ் குழுவினர் செம ஆப்பு வைத்துள்ளனர்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளதால் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் பெரும் சரிவை சந்திக்கும். இருப்பினும் பிக்பாஸ் குழுவினரின் இந்த புது முயற்சியை பற்றி அறிந்த பிக்பாஸ் ரசிகர்கள் அடுத்து சீசனுக்காக ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்