ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட ஜூலி மிகவும் பிரபலம் ஆனார்.இதனால் இவரை விஜய் டிவி பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி வாயிலாக சின்ன திரையில் அறிமுகப்படுத்தியது .


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் அனைவரும் சினிமாவில் உள்ளவர்கள், ஆனால் ஜூலி மட்டும் சினிமா பின்புலம் இல்லாதவர். இன்றைய தேதியில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் பிரபலமாகிவிட்டார்கள். மேலும் ஜூலி பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்தாலும்,அவர் செய்த சில காரியங்களால் மக்களிடம் அதிகமாக வெறுப்பை சம்பாதித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி என்றாலே போலி என்று சொல்லும் அளவிற்கு நிலை உண்டானது.

julie biggboss
julie

இந்நிகழ்ச்சி முடிந்ததும் பிரபல தொலைக்காட்சியில், தொகுப்பாளர் ஆனார் ஜூலி. அடுத்து மெல்ல திரையுலகத்திலும் காலடி எடுத்து வைத்தார். விமல் நடிக்கும் மன்னர் வகையறா படத்தில் தங்கை வேடத்தில் நடித்து வருகின்றார்.

juliana

சமீபத்தில் ஒரு அப்பளம் விளம்பரத்தில் இவர் நடித்துள்ளார். இதை அவரே தன் ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.

இதோ அந்த விளம்பரம் ..

இந்த விளமபரத்தில் ஜூலியின் ஃபேவரைட் டயலாக்கான ‘5 செகன்ட்’ என்ற டயலாக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.