Connect with us

Cinemapettai

பிக்பாஸில் அடுத்த வாரம் நடக்க போகும் கூத்து? லாஸ்லியா காதலுக்கு முடிவு.. கதற போகும் போட்டியாளர்கள்

kamal-big-boss

Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸில் அடுத்த வாரம் நடக்க போகும் கூத்து? லாஸ்லியா காதலுக்கு முடிவு.. கதற போகும் போட்டியாளர்கள்

பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி வந்ததிலிருந்து பொதுமக்களுக்கும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் என்டர்டைமெண்ட் ஆக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை பொதுவாகக் கூறினால் “அடுத்தவன் வீட்ட எட்டிப் பார்க்கிறது தான் பொழப்பே…”என்ற பேச்சுக்கு ஏற்றார்போல வீட்டிற்குள் காரசாரமான நிகழ்வுகள் அடிக்கடி நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

இந்நிலையில் அடுத்த வாரம் பிக்பாஸ்,”எல்லாரும் சண்டை போட்டது போதும், கொஞ்சநேரம் சோகமா இருக்கிற மாதிரி நடிங்க”என்று சொல்வதைப்போல போட்டியாளர்கள் பெற்றோர்களை நேரடியாக அழைத்து வருவதைப் போன்ற ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இதன் காரணமாக லாஸ்லியாவின் அம்மாவை கேட்டபோது, “எனக்கு அவளைப் பார்க்க இஷ்டம் இல்ல, ஏற்கனவே லவ் என்ற பெயரில் ஒரு பொண்ண நான் இழந்துவிட்டேன். குடும்பத்தைப் பற்றி யோசிக்காமல் இப்படி நடத்த கெட்டு போன பொண்ண நான் ஏன் பாக்கணும்”என்பதைப்போல் கூறியுள்ளார். அவரை சமாதானப்படுத்த இரண்டு பேர் கொண்ட குழு ஒன்று ஸ்ரீலங்கா விரைந்துள்ளனர்.

கவின் ஆரம்பத்திலிருந்தே பெண்களுடன் சேர்ந்து கொண்டு கூத்தடிப்பது, அவர்கள் பாத்ரூம் போனால் பின்னாடியே போவது என்றெல்லாம் நடந்து கொண்டிருந்தான். இருப்பினும் கவின் உடன் சேர்ந்து லாஸ்லியா தனது மதிப்பையும் மரியாதையும் இழந்து கொண்டிருக்கிறார் என்பது அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் தெரிந்து கொள்வார்.

ஏற்கனவே கக்கூஸ் கவின், லூஸ்லியா என்ற ஹேஷ் டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றன. தனது குடும்ப நிலை தெரிந்திருந்தும் தான் இப்படி எல்லாம் செய்வது தவறு என்று உணர்ந்தால் நல்லதாக இருக்கும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top