Tamil Cinema News | சினிமா செய்திகள்
நிவர் புயலால் நிலைகுலைந்து போன பிக் பாஸ் வீடு, அலறும் போட்டியாளர்கள்.. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!
சென்னையில் உள்ள பல இடங்களில் தன்னுடைய கோரத்தாண்டவத்தை ஆடிவிட்டு சென்றிருக்கிறது நிவர் புயல். இதனால் சென்னையின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு வருகிறது.
மேலும் சென்னையில் பூவிருந்தவல்லி அருகே தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான செட் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலும் நிவர் புயல் தன்னுடைய ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி ஆட்டம் ஆடியதால் பிக்பாஸ் செட் நிலைகுலைந்து போய் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதாவது பிக்பாஸ் வீட்டிற்கான செட் அமைக்கப்பட்டுள்ள ஈவிபி பகுதிக்கு அருகில் தான் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளதாம். இந்த ஏரி நேற்றுமுன்தினம் புயலால் பெய்த கனமழை காரணமாக திறந்துவிடப்பட்டது.
இதனால் பிக்பாஸ் வீடு மழை, வெள்ளம், பலத்த காற்று என பலவற்றால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ளதாம். மேலும் இதைப் பார்த்து பயந்து போன பிக்பாஸ் போட்டியாளர்கள், ‘எங்கள எப்படியாவது பத்திரமா வீட்டுக்கு அனுப்பிடுங்க, ப்ளீஸ்’ என்று கதறியதாக கூறப்படுகிறது.
எனவே பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் அருகிலுள்ள சொகுசு ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இன்று இரவு தான் அவர்கள் வீட்டிற்குள் அனுப்பப்படுவார்கள் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

nivar-bigg-boss
ஆகையால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாக ஒரே டாஸ்கையே ஒளிபரப்பி வருகிறார்களாம்.
மேலும் பிக் பாஸ் வீட்டின் இந்த நிலைமை சீரான பிறகுதான் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
