Tamil Cinema News | சினிமா செய்திகள்
நாலு மணி பிட்டு போஸ்டரை பற்றி கேட்டவுடன் திருதிருவென முழித்த சிவானி.. அரவணைத்து ஆறுதல் கூறிய பிரபலம்
பிக் பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் தற்போது களத்தில் 16 போட்டியாளர்கள் நின்னு விளையாடுகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களிலேயே பல சண்டை காட்சிகளும், பல சென்டிமெண்ட்களும் அரங்கேறி வரும் இந்த சூழலில் பிக் பாஸ் வீட்டில் கார்டன் ஏரியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஆரியின் நெத்தியடி பதிலால் அவர் ஃபேன்ஸ்கள் ஆர்மியை ஆரம்பிக்க தயாராகிவிட்டனர்.
ஏற்கனவே, வீட்டிற்குள் வந்த இரண்டே நாட்களில் ஷிவானியை சக போட்டியாளர்கள் ஓரம் கட்ட ஆரம்பித்து விட்டனர்.
இந்த சூழலில் கார்டன் ஏரியாவில் ஆரி, ஷிவானி பேசிக்கொண்டிருக்கும்போது ஆரி “விளையாடுவதற்கு ஒரு ஸ்டார்ட்டிக்யோடு உள்ள வந்திருக்காங்க! என்று சொல்கின்றவர்கள் தான், நிச்சயம் ஒரு ஸ்டார்ட்டிக் ஃபாலோ பண்ணுவாங்க”
நாலு மணிக்கு இன்ஸ்டாகிராமில் எதுக்கு பிட்டு போஸ்ட் போடுறேங்க என்று கேட்டவுடன் பதிலளிக்க முடியாமல் திணறினார் சிவானி, ஒரு செளிப்ரிட்டியாக மாற வேண்டும் என்று தானே, அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினார்.
அது மட்டுமல்ல “இந்த வீட்ல யார வேணாலும், யார் வேணாலும் காலி பண்ணிட்டு ஜெயிக்கணும்னு கங்கணம் கட்டிட்டு இருக்காங்க.
இதெல்லாம் கண்டுக்காம போய்க்கிட்டே இருக்கணும், அவ்ளோதான்!.” என்று சக போட்டியாளர்கள் ஒதுக்கிய ஷிவானி இடம் நச்சுனு நாலு வார்த்தையில பிக்பாஸ் விளையாட்டின் உண்மையான நிலையை நெத்தியடி பதிலாய் சொல்லிட்டாரு நடிகர் ஆரி.

aari-shivani
இவருடைய இந்த பேச்சில் இம்ப்ரஸ் ஆன ரசிகர்கள் ஆரிக்கு ஆர்மி அமைக்க முடிவெடுத்துவிட்டனர்.
