தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த நடிகை என்றால் அது ரேகா தான். இப்போதுதான் மலர் டீச்சர் ஃபேமஸ் ஆனால் 80களில் ஜெனிஃபர் டீச்சர் தான் ஃபேமஸ். ரேகா மற்றும் சத்யராஜ் நடிப்பில் வெளியான கடலோர கவிதைகள் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தில் ரேகா ஜெனிஃபர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இன்று வரை இந்த கதாபாத்திரம் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ரேகா ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகியிருந்தார்.
பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுத்த ரேகா சீரியல்கள் மற்றும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் கலந்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார்.
தற்போது சரியான பட வாய்ப்புகள் அமையாததால் யூடியூப் சேனல் ஒன்றில் தொடங்கி சமையல் மற்றும் வேறு சில வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அச்சு அசல் அம்மன் போலவே இருக்குமாறு போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார்.
தமிழில் ஏராளமான படங்களில் நடித்த நடிகை ரேகாவிற்ககு நீண்ட நாளாக அம்மன் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனால் அந்த ஆசை தற்போது வரை நிறைவேறவில்லை.
இதனால் தான் நடத்தி வரும் யூடியூப் சேனலிலாவது அம்மன் வேடத்தில் போட்டோ ஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்ற நோக்கில் வேப்பிலைக்காரி அம்மன் வேடத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த போட்டோ மற்றும் இது குறித்து ரேகா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.