News | செய்திகள்
பிக் பாஸ் ஜோடியை வைத்து படம் தயாரிக்கும் யுவன் ஷங்கர் ராஜா. பட டைட்டிலில் சிம்பு கனெக்ஷன்.
பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண், ரெய்சா வில்சன் இருவரும் தாங்க அந்த ஜோடி. இந்த படத்திற்கு வித்தியாசமாக ‘பியார் பிரேமா காதல்’ என்று பெயரிட்டுள்ளனர்.
‘பாகுபலி 2’ படத்தை வெளியிட்ட கே புரொடக்ஷ்ன்ஸ் ராஜராஜன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட் இணைந்து தயாரிக்கும் படம் இது.
முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகும் இப்படத்தை இளன் எழுதி இயக்குகிறார். இப்படத்துக்கு ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர்ராஜா இசையமைக்கிறார்.
இப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.
‘கிரகணம்’ படத்தை இயக்கியவரான இளன் இயக்கும் இந்த படத்திற்கான அனைத்து பாடல்களின் கம்போசிங் சமீபத்தில் மலேசியாவில் நடந்து முடிந்துள்ளது.
படம் குறித்து இயக்குநர் இளன் கூறுகையில், ”உலக அளவில் மாபெரும் வெற்றிபெற்ற படங்கள் அனைத்துமே காதலை அழகாகவும் அழுத்தமாகவும் சொல்லப்பட்ட படங்கள்தான். அந்தப் படங்களில் இசையும் மக்களை தியேட்டருக்கு இழுத்த முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. அந்த பார்முலாவில் உருவாகும் படமே ‘பியார் பிரேமா காதல்’. காதலை இந்தியில் பியார் என்றும் தெலுங்கில் பிரேமா என்றும் தமிழில் காதல் என்றும் டைட்டில் வைத்திருக்கிறோம்” என்றார்.
ஹரிஷ் கல்யாண், ரெய்சா ஆகியோருடன் நடிப்பதற்கான மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வு முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு விரவில் துவங்குமாம்.
சினிமாபேட்டைகிசு கிசு
சிம்புவின் Love Anthemல் இருந்து டைட்டில் எடுத்துள்ளது தான் படத்தின் ஹைலைட். யுவன் சிம்புவின் நெருங்கிய நண்பர். மேலும் ஹரிஷ் கல்யாண் சிம்புவை சில நாட்களுக்கு முன் சந்தித்தார். இந்நிலையில் இப்படத்திற்கு பியார் பிரேமா காதல் என்று டைட்டில் வைத்துள்ள நிலையில். சிம்பு இப்படத்தில் என்ன பங்கு வகிப்பார் என்று தெரிந்து கொள்வதற்கு ஆர்வமாக உள்ளது நமக்கு .
