பிக் பாஸ்:

தமிழ் நாட்டில் தற்போதைய லேட்டஸ்ட் சென்சேஷன் என்றாலே அது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் தான். இந்நிகழ்ச்சிக்கு பின் அவர்கள் வேற லெவெலுக்கு சென்று விட்டார்கள் என்றால் அது மிகையாகாது. நிகழ்ச்சி முடிந்த பிறகும்  பல போட்டியாளர்கள் தொடர்ந்து பேட்டிகளாக கொடுத்து வருகின்றனர். அவர்களின் சோசியல் மீடியா பக்கங்களிலும் ஆக்டிவ்வாக செயல் பட ஆரம்பித்துள்ளனர்.பல இளம் பெண்கள் இந்நிகழ்ச்சியை பார்க்க முக்கிய காரணம் யார்  என்றால் ஆரவ் மற்றும் ஹரிஷ் கல்யாண் தான்.

ஹரிஷ் கல்யாண்:

சிந்து சமவெளி படத்தில் அறிமுகம் ஆகியிருந்தாலும் , இவருக்கு நல்ல ரீச் கொடுத்தது என்றால் சட்டப்படி குற்றம், பொறியாளன், வில் அம்பு போன்ற படங்கள் தான். மனிதர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு எது செய்தாலும் அது வைரலாகி விடுகிறது.

அதிகம் படித்தவை:  "குக்கொட்டி கூனாட்டி". அருவி - பேபி ட்ராக் வீடியோ பாடல் !

த்ரிஷாவுடன் ஹரிஷ் கல்யாண்:

இந்த நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண், திரிஷாவை சந்தித்துள்ளார், “ஜெஸ்ஸி ஜெஸ்ஸி தருணம். நீங்கள் மிகவும் அன்பானவர்என்ற வாசகத்துடன் அவருடன் அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை ஹரிஷ் தன்னுடைய டுவிட்டரில் அப்லோட் செய்தார்.

இதற்கு த்ரிஷாவும் ‘உன்னை சந்தத்தில் மகிழ்ச்சி, ஆல் தி பெஸ்ட்’ என்று ரிப்ளை செய்துள்ளார்.

இந்த போட்டோவே  சமூக வலைதளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

சிம்புவுடனான சந்திப்பு :

சில நாட்களுக்கு  முன் அவர் சிம்புவை சந்தித்தார், அப்பொழுது சிம்பு தன் கை எழுத்து இட்டு இவருக்கு ஒரு புத்தகத்தையும் நினைவுப் பரிசாக தந்தார். அந்த புத்தகத்தில் “Never Forget where you started” என்ற இந்த வாசகத்தையும் எழுதினர் நம் எஸ் டி ஆர்.

அதிகம் படித்தவை:  96 படத்தின் "காதலே காதலே" பாடல் வீடியோ !

சினிமா பேட்டை காமெண்ட்ஸ்:

அது என்ன செலஃபீ என்றாலே ஒரு கண்ணை மூடிக்கிறீங்க, காரணம் என்னான்னு சொல்லுங்க ஹரிஷ்.
எது எப்படியோ சட்டுபுட்டுனு முழு நேர ஹீரோவா நடிச்சு ஒரு ரவுண்டு வாங்க. வி ஆர் வைட்டிங்.