ஓடிடி என்றதும் அத்துமீறும் பிக் பாஸ்.. சர்ச்சைக்குரிய டாப்பிக்கை பற்றி பேசும் போட்டியாளர்கள்

கடந்த வாரம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் துவங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே போட்டியாளர்களுக்கு இடையே காரசாரமான விவாதங்களும் சண்டை சச்சரவும் நடந்து கொண்டிருக்கிறது. பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் இருக்கும் 14 போட்டியாளர்களுக்கு இரண்டாவது டாஸ்க் ஆக குடிக்கணும் கடிக்கணும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு ஹவுஸ் மேட்ஸ் அனைவருக்கும் கேள்வி கேட்கப்படும்.

அந்தக் கேள்விக்கு ஆம் என்றால் பாகற்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். இல்லை என்றால் சிப்சை கடிக்க வேண்டும். எனவே இந்த டாஸ்க்கில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எல்லாம் வனிதா சம்பந்தமே இல்லாமல் பதில் சொல்லி சிப்சை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தாடி பாலாஜி கண்ணாடி பாட்டிலில் இருந்து சீட்டை எடுத்து கேள்வியை கேட்கும் போது அதில் விவகாரமான கேள்வி எழுதப்பட்டிருந்ததால் அதை வாசிக்க மறுத்துவிட்டார்.

அதன்பிறகு வீட்டின் தலைவரான சாரிக் அதை வாசித்தார். என்னவென்றால் காண்டமை பலூன் போன்று ஊதி விளையாடி இருக்கிறீர்களா? என்பதுதான் கேள்வி. இந்தக் கேள்வி பிடிக்காததால் வனிதா போட்டியிலிருந்து விலகுவதாக சொல்லி சமையலறைக்குச் சென்று சமைக்க ஆரம்பித்து விட்டார்.

ஆனால் இந்தக் கேள்விக்கு வீட்டில் இருப்பவர்கள் பதில் சொல்ல வேண்டும். எனவே ஒவ்வொருவராக தங்களுடைய பதில் குடித்தும் கடித்தும் தெரிவித்தனர். இதற்கிடையில் இதுபோன்ற கேள்விகளை கேட்க வேண்டாம் சிறு பிள்ளைகள் எல்லாம் இந்த நிகழ்ச்சியை பார்க்க வாய்ப்பிருக்கிறது என்று வனிதா கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தார்.

அதற்கு நிரூப், இதை ஏன் தவறாக பார்க்கிறீர்கள்? இது யாரும் பேசக்கூடாது என்று தடைசெய்யப்பட்ட டாப்பிக் கிடையாது. சும்மா கேம்மிற்காக விளையாடுகிறோம் என்று வனிதாவுடன் வாக்குவாதம் செய்கிறார். இவ்வாறு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு சர்ச்சைக்குரிய கேள்விகளை சீட்டில் எழுதி அதை கேட்டு கலகம் மூட்டிவிடும் வேலையை பிக்பாஸ் சரியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அத்துடன் இந்த டாஸ்க்கின் மூலம் நடந்து முடிந்த சீசன்களை காட்டிலும் ஓடிடி தளமென்பதால், அத்துமீறி ஒரு சில விஷயத்தை போட்டியாளர்களை பேசவைக்க பிக்பாஸ் தூண்டுகிறார் என்று ரசிகர்கள் தரப்பிலிருந்து குற்றம்சாட்டப்படுகிறது. அத்துடன் இந்த முறை வனிதா நியாயமாக கேள்வி எழுப்பி இருப்பதாகவும், குழந்தைகள் பார்க்க கூடிய நிகழ்ச்சி என்பதால் இதுபோன்ற டாப்பிக்கை பேசக்கூடாது என்று வனிதா சொல்லியதற்கு பிக்பாஸ் ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்