fbpx
Connect with us

சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் 4 போட்டியாளர் யார் தெரியுமா? சூர்யாவுக்கே டப் கொடுப்பார் போல! 

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் 4 போட்டியாளர் யார் தெரியுமா? சூர்யாவுக்கே டப் கொடுப்பார் போல! 

எண்டமோல் நிறுவனம் தயாரிப்பில் விஜய் டிவியில் நம்மவர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் ரியாலிட்டி ஷோ தன் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது.

இம்முறை இளசு + பெருசு என கலக்கல் காம்போவாக உள்ளனர் போட்டியாளர்கள். யார் அடுத்த வனிதா, ஓவியா, ஆரவ் என ரசிகர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அர்மிகள் ஆரம்பிக்கப்பட்டு சமூகவலைத்தளங்கள் அல்லோல்பட்டு வருகிறது.

சுதா கொங்கரா இயக்கியுள்ள படம் சூரரைப் போற்று. இத்திரைப்படம் நேரடியாக அமெசானில் அக்டோபர் 30 அன்று வெளியாகவுள்ளது நாம் அறிந்த விஷயமே.

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள சோம்ஸ் என்கிற சோம் ஷேகர், சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ளாராம். இவர் சூர்யாவுடன் ஏர் ஃபோர்ஸ் அதிகாரி ரோலில் நடித்துள்ளார்.

soms

யார் இந்த சோம் சேகர் – சென்ற சீசனில் முகேன் ராவ் போன்றே தோன்றுகிறார் இவர். தமிழ் நாட்டில் அதிகம் பரிச்சயம் இல்லாத ஒருவர். ஆல்பம் பாடல்கள், குறும்படங்கள், விளம்பரங்கள்‌ போன்றவற்றில் நடித்து பிரபலமானவர்.

அதுமட்டுமன்றி மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் குத்துச் சண்டை வீரரும் ஆவார். அவர் இதற்கு முன்னர் விஜய் டிவியில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார், மூன்றாம் இடத்தை பிடித்தார். எனவே விஜய் டிவியின் வளர்ப்பு பிள்ளை தான்.

எத்தனை பெண்களின் தூக்கத்தை கெடுக்க போகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
To Top