Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடுத்தவங்க புருஷனுக்கு ஆசைப்பட்ட உனக்கு அம்மன் வேஷமா? நயன்தாராவை வம்புகிளுத்த பிக் பாஸ் பிரபலம்!
தென்னிந்திய திரையுலகில் 15 வருடங்களுக்கு மேலாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா.
தற்போது ஆர் ஜே பாலாஜியின் இயக்கத்தில் “மூக்குத்தி அம்மன்” என்ற படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நயன். இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் திரையிடப்பட உள்ளது.
இந்த நிலையில் சர்ச்சைக்கு பெயர் போன பிக்பாஸ் பிரபலமான மீரா மிதுன் நயன்தாராவை விமர்சித்து இருப்பது திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் தான் மீரா மிதுன். இவர் அவ்வப்போது பப்ளிசிட்டிக்காக திரைத்துறையில் உள்ள முன்னணி நடிகர்களை இழிவாக பேசுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது மீரா, நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்திருப்பது குறித்து ‘அம்மன் என்றால் யார் என்று இவருக்கு தெரியுமா?’ என விமர்சித்திருப்பது நயன்தாராவின் ரசிகர்களை எரிச்சலூட்டியுள்ளது.
மேலும் இதுகுறித்து மீரா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஏற்கனவே திருமணமான ஆணுடன் உறவு வைத்திருப்பவருக்கு இந்து கடவுளான அம்மன் வேடத்தில் நடிக்க தகுதி இருக்கிறதா?
இதுபோன்ற இந்துக் கடவுள்களை அசிங்கப்படுத்தும் கதாபாத்திர தேர்வுக்கு அரசியல்வாதிகள் வாய் திறக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த நிகழ்வுகள் எல்லாம் தமிழகத்தில் கோலிவுட் சினிமாவில் மட்டும்தான் நடக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவைப் பார்த்த நயன்தாராவின் ரசிகர்கள், ‘ நீ மொத உன்னுடைய லட்சணத்தை பாரு’ என்று மீரா மிதுனை சமூக வலைத்தளங்களில் நார் நாராய் கிழித்துக்கொண்டிருக்கின்றனர்.

meera-mithun-viral-twit-3
