Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீங்களும் ஒரு நடிகையா? என கலாய்த்த நெட்டிசன்களை கிழித்து தொங்கவிட்ட பிக்பாஸ் பிரபலம்!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக மக்களின் ஃபேவரட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பானது தான் பிக் பாஸ்.
ஆனால் இதுவரை வெளியான பிக்பாஸ் சீசன்களிலேயே, சீசன் 3 தான் மற்ற இரண்டு சீசன்களை விட பிரபலமானது.
ஏனெனில் இந்த சீசனில் தான் அதிக அளவு சண்டைகாட்சிகள், கலவரங்கள், காதல்கள், மோதல்கள், பஞ்சாயத்துகள், பிரேக்கப்புகள், காமெடிகள் என எதற்குமே குறைவில்லாமல் நவரசமும் கலந்திருந்தது.
மேலும் பிக்பாஸ் சீசன் 3ல் பங்குபெற்ற பிரபலமாடல் அழகி சாக்க்ஷி ரசிகர்களின் மத்தியில் பெரிதும் பிரபலமானார்.
இவ்வாறிருக்க, சாக்க்ஷியின் இணையதள பதிவினை பங்கம் செய்தவர்களை வார்த்தைகளால் கிழித்துள்ளார் சாக்க்ஷி.
அதாவது, சமீபத்தில் நடிகை சாக்க்ஷி ‘காலா’ படத்தில் நடித்த சில காட்சிகளின் புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த பதிவிற்கு ரசிகர் ஒருவர், ‘இதுவரை இவரும் ஒரு நடிகை என்பது எனக்கு தெரியாது. இவரை பிக்பாஸ் மூலமாக ஒரு மாடல் என்று தான் எனக்கு தெரியும்’ என்றும், மற்றொருவர், ‘பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்டாரா? அதுவே எனக்கு தெரியாது’ என்றும் கிண்டல் செய்து இருந்தனர்.
இதற்கு சாக்க்ஷி, ‘உங்களுக்கு ஏதோ தீவிரப் பிரச்சினை இருக்கிறது என்று நினைக்கிறேன், இருப்பினும் என்னை பிக்பாஸில் பார்க்காமல் நீங்கள் என்னை பின்பற்றுவதை நினைத்து நான் சந்தோசப்படுகிறேன்’ என்று பதிலடி அளிக்கும் வகையில் கூறியுள்ளார்.
இப்படி காரசாரமான விவாதங்களில் ஈடுபட்டு, தன்னை கலாய்த்த நெட்டிசன்களை கிழித்துத் தொங்க விடுகிறார் சாக்க்ஷி.

sakshi-agarwal-cinemapettai
