ரேஷ்மாவுடன் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்திய சீரியல் நடிகர்.. இணையத்தில் குவியும் லைக்குகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவு இந்த சீரியலுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், தற்போது சுவாரஸ்யத்துடன் ரசிகர்களை கொஞ்சம் கொஞ்சமாக ஈர்த்து வருகிறது.

இந்த சீரியலில் பிக் பாஸ் சீசன்3-ல் பங்கேற்ற ரேஷ்மா, ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதை சீரியலில் பாக்கிலஷ்மியின் இளைய மகனான எழில் உடன் ரேஷ்மா படு கவர்ச்சியான போட்டோ ஷூட் களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் எக்கச்சக்கமான லைக்குகளை தட்டி விடுகின்றனர். ஏனென்றால் கவர்ச்சியில் எல்லை மீறும் ரேஷ்மாவின் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடுவதற்கு என்றே இணையத்தில் அவருடைய ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

இதற்காக ரேஷ்மாவும் தன்னுடைய அழகிய மற்றும் கவர்ச்சியான போட்டோ ஷூட் ஸ்டில்களை பதிவிட்டு, அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். மேலும் இவர் ஒரு சில திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

reshma-cinemapettai
reshma-cinemapettai

குறிப்பாக விஷ்ணு விஷாலின் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற படத்தில் சூரியின் மனைவியாகவும் நடித்தது மட்டுமல்லாமல் புஷ்பா புருஷன் என்ற காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.

அதன்பின் திரைப்படங்களில் எதிர்பார்த்த அளவு ரேஷ்மாவுக்கு வாய்ப்பு வரவில்லை என்பதால் சீரியல்களில் நடிக்க தொடங்கிவிட்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் ரேஷ்மாவின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்