Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் பிரபலத்திற்கு நடந்த சோகம்.. நல்லது செய்யப் போய் இப்படி ஆயிருச்சே!
சமீபத்தில் பாராளுமன்றம் நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களுக்கு எதிரான போராட்டம் இந்தியா முழுவதும் வலுப்பெற்றுவருகிறது. இந்த மசோதாவால் விவசாயிகளுக்கு எந்தவித பலனும் இல்லை என பல தரப்பினரும் கடும் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளரும், பஞ்சாபி பாடகருமான ஹிமான்ஷி குரானா மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட விவசாய மசோதாக்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு, அப்போராட்டத்தில் பங்கேற்றவர் அனைவருக்கும் ஷாக் நியூஸ் கொடுத்துள்ளார்.
இதைப்பற்றி அவர் அவரது ட்விட்டர் பக்கத்தில், “சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த போதும் கூட நான் கோவிட் -19 பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றுள்ளேன்.

Himanshi
நேற்றைய தினத்திற்கு முன்பு நான் போராட்டத்தில் பங்கேற்ற போது அந்த இடம் மிகவும் நெரிசலாக இருந்தது. அதனால் நான் ஷூட்டிங்கிற்கு செல்லும் முன்பு இந்த டெஸ்ட் எடுக்க முதலில் முடிவு செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ட்வீட்டை பார்த்து போராட்டத்தில் பங்கு கொண்டவர்களில் பலர் பயத்தில் நடுநடுங்கி கொண்டிருக்கின்றனராம்.
