Connect with us
Cinemapettai

Cinemapettai

oviya-big-boss

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெள்ளந்தியான பேச்சால், ஓவியாவை போல் ரசிகர்களை ஈர்த்த மற்றொரு பிக்பாஸ் கன்டஸ்டன்ட்.. குவியும் ஆதரவு!

விஜய் டிவியில் இதுவரை 3 சீசன்களை வெற்றிகரமாக நடத்திய பின், தற்போது 4-வது சீசனை இந்த மாதம் நான்காம் தேதியிலிருந்து தொடங்கியுள்ளனர்.

மேலும் முதல் சீசனை போலவே தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 4-வது சீசனும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அதுமட்டுமில்லாமல் முதல் சீசனில் தனது வெள்ளந்தி பேச்சால் ரசிகர்களை கவர்ந்த ஓவியாவை போலவே, இந்த சீசனிலும் பாலாஜி நடந்து கொள்வதை அனுதினமும் பார்த்து வரும் ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

ஏனெனில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடும் போது, பாலாஜியை ஓவியாவுடன் ஒப்பிட்டு பல புகைப்படங்களையும், கமெண்ட்டுகளையும் அதிகமாக பதிவிடுகின்றனர்.

எனவே முதல் சீசனில் ஓவியா ஒரு கட்டத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் அவருக்கு ஆதரவாய் பல ரசிகர்கள் துணை நின்றனர்.

மேலும் அவர் மறுபடியும் பிக்பாஸ் வீட்டில் வரவேண்டும் என்று ரசிகர்கள் பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. இருப்பினும் பிக்பாஸ் விதிமுறையின்படி அவரால் மறுபடியும் பிக்பாஸ் வீட்டிற்கு வர முடியவில்லை.

தற்போது ஓவியாவை போலவே, இந்த சீசனில் பாலாஜியின் வெளிப்படையான பேச்சால் கவரப்பட்ட ரசிகர்கள், அவரே இந்த சீசனின் வெற்றியாளராவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்ற  கருத்தை பதிவிடகின்றனர்.

Continue Reading
To Top