fbpx
Connect with us

பிக் பாஸ் மொட்ட அங்கிளுக்கு இவ்வளவு திறமையா? டக்குனு குவியும் ரசிகர் பட்டாளம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் மொட்ட அங்கிளுக்கு இவ்வளவு திறமையா? டக்குனு குவியும் ரசிகர் பட்டாளம்

எண்டமோல் நிறுவனம் தயாரிப்பில் விஜய் டிவியில் நம்மவர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் ரியாலிட்டி ஷோ தன் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இம்முறை இளசு + பெருசு என கலக்கல் காம்போவாக உள்ளனர் போட்டியாளர்கள். ஆர்மிகள் ஆரம்பிக்கப்பட்டு சமூகவலைத்தளங்கள் அல்லோல்பட்டு வருகிறது.

இம்முறை பலரது கவனத்தையும் ஆரம்பத்திலேயே ஈர்த்தவர் சுரேஷ் சக்ரவர்த்தி. இவர் புரோமோவில் காரசாரமாக விவாதங்களில் ஈடுபட்டு ரசிகர்களை எரிச்சல் பட வைத்துள்ளார்.

யார் இந்த சுரேஷ் சக்கரவர்த்தி என வாங்க பார்ப்போம்..

சுரேஷ் சக்ரவர்த்தி தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர். யு ட்யூபில் இவரது சமயல் பிரபலம் தான். மேலும் இவர் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். சுரேஷ் சக்ரவர்த்தி பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை இயக்கி இருக்கிறார். மேலும் எனக்குள் ஒருத்தி என்ற தொடரை எழுதி, இயக்கி, அதில் நடித்தும் இருக்கிறார்.

ஏவிஎம் நிறுவனத்தில் ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர் ஆக முதலில் பணியை துவங்கியவர் சுரேஷ் சக்ரவர்த்தி. அமலா, கார்த்திக் போன்ற நடிகர்களின் மேனேஜர் ஆகவும் இருந்திருக்கிறார். பாலசந்தரின் அழகன், பாலு பாலுமகேந்திரா இயக்கத்தில் வண்ண வண்ண பூக்கள் ஆகிய படங்களில் நடித்தார்.

வாக்குமூலம் படத்திற்க்கு முன் அழகன் படம் ரிலீஸ் ஆனதால் இவரது முதல் படம் தமிழில் ‘அழகன்’ தான். அந்தப்படத்தில் இவருடைய கதாபாத்திரமான ‘சொக்கு’ படத்திற்கு கூடுதல் வலுசேர்த்தது. 80ஸ் கிட்ஸ் அவரை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

big boss 4 suresh chakravarthy

சன் டிவி டிவியின் உரிமையாளர் கலாநிதி மாறன் இவருக்கு நெருக்கமான நண்பர். சீனியர் ப்ரோக்ராமிங் மேனேஜராக சன் டிவியில் கிட்டத்தட்ட 8 வருடம் பணியாற்றினார்.

அதன் பின் லண்டன் சென்று பல சேனல்களில் முக்கிய பதவிகளில் இருந்துள்ளார். பிறகு ஆஸ்திரேலியா சென்று அங்கு 20 வருடமாக இருந்திருக்கிறார்.

சுரேஷ் சக்ரவர்த்தி ஒரு perfectionist , எனவே மற்ற போட்டியாளர்களுடன் சகிப்பு தண்மை இன்றி நடந்து வருகிறார். இதுவே அவரது குணம். வரும் நாட்களில் மொட்ட பாஸ் அட்டகாசத்தில் பிக் பாஸ் வீடு என்னவாகப்போகுது என பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
To Top