Tamil Cinema News | சினிமா செய்திகள்
சக்களத்தி சண்டைக்கு தயாராகும் வனிதா.. கொளுத்தி போட்டு வேடிக்கை பார்க்க போகும் பிக் பாஸ் சீசன் 4
கடந்த பிக் பாஸ் சீசன் 3-ல் அதிகமாக சண்டை மூட்டி விட்டவர் என்று பார்த்தாள் வத்திக்குச்சி வனிதா மட்டுமே. இதனால் விஜய் டிவியின் டிஆர்பி எங்கேயோ சென்றதாம். பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களை தேர்வு செய்து, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அடுத்த மாதம் போட்டி தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சில நாட்களாக வனிதாவின் மூன்றாவது திருமணம் பெரும் சர்ச்சையை கிளப்பி பீட்டர்பாலின் மனைவி வழக்கு பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டு முட்டி கொண்டனர்.
இதற்கிடையில் சூர்யா தேவியும் காவல் நிலையம் வரை சென்று அவமானப்பட்ட அசிங்க படுத்தப்பட்டார். இதெல்லாம் ஒருபுறமிருக்க பிக்பாஸ் வீட்டினுள் பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் அல்லது சூர்யா தேவியை போட்டியாளராக இறக்கி விட உள்ளனர்.
அதாவது டிஆர்பி குறையும் நேரத்தில், தூக்கி நிறுத்துவதற்காக வனிதாவை கெஸ்ட் ரோலில் பிக்பாஸ் வீட்டினுள் அனுப்ப உள்ளனர். இப்படி செய்வதன் மூலம் டிஆர்பி எங்கேயோ சென்று விடுமாம், அது மட்டுமல்லாமல் சென்டிமென்டாக ரசிகர்களை அழ வைத்துப் பார்ப்பதில் பேரானந்தம் விஜய் டிவிக்கு.
விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சி கலந்து கொண்ட நாஞ்சில் விஜயனை களத்தில் இறக்கி விட்டாலும் ஆச்சிரிய பட ஒன்றும் இல்லை, அப்படி நடந்தால் பிக்பாஸ் வீடு போர்க்களமாக மாறும் என்பது தான் கணிப்பு.
இதனால் வனிதா சண்டை மூட்டி விடுவதற்கு தகுந்த நேரத்தை பிக்பாஸ் வீட்டில் இறக்கி விடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
