Connect with us

Cinemapettai

ஆரம்பமே சர்ச்சையை கிளப்பிய பிக்பாஸ்-3 வீடு.. கமல் மீது கொலவெறியில் ரஜினி ரசிகர்கள்

kamal-bigg-boss-3-rajini

Cinema News | சினிமா செய்திகள்

ஆரம்பமே சர்ச்சையை கிளப்பிய பிக்பாஸ்-3 வீடு.. கமல் மீது கொலவெறியில் ரஜினி ரசிகர்கள்

நேற்றைய தினத்தில் கோலாகலமாக தொடங்கிய விஜய் டிவியின் பிக் பாஸ் 3 ஆரம்பத்திலேயே பெரும் சர்ச்சையை கிளப்ப ரஜினியை இழுத்துள்ளனர்.

நேற்று பிக் பாஸ் வீட்டில் ப்ரோமோ வீடியோ வெளிவந்தது. அப்பொழுது ரஜினியின் பேட்ட படத்தின் புகைப்படம் வரையப்பட்டிருந்தது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகை பிடிப்பது போன்று வரையப்பட்டிருந்தது. இப்பொழுது அதனை எடுத்துவிட்டார்கள்.

இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன என்று ரஜினி ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றன. புகை பிடிப்பது போன்று அதிகமாக இடத்தில் படம் இருந்ததால் பிக்பாஸ் குழுவினர் அதனை எடுத்து உள்ளனர்.

இது மட்டுமல்லாமல் இது போன்ற பிரபலங்களின் படங்களை நிகழ்ச்சிகளில் வைப்பதற்கு அனுமதி பெற வேண்டும் என்பதால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

ஆனால் ரஜினி ரசிகர்கள் இதனை பெரும் சர்ச்சையாக கிளப்பியுள்ளனர் என்னவென்றால் நடிகர் கமலஹாசன் தான் இதனை எடுக்கச் சொல்லி இருப்பார் என்று பதிவிட்டுள்ளனர்.

ஆரம்பமே அமர்க்களப்படுத்தி உள்ள பிக் பாஸ் 3 ரஜினி ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top