இந்திய அளவில் பிக்பாஸில் பிரமிக்க வைத்த 5 தொகுப்பாளர்கள்.. இதில் யாரு உங்க ஃபேவரிட்.?

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் 25 ஜூன் 2007 ஆம் ஆண்டு தொடங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 1. இதன் மூலம் தான் பிக்பாஸ் என்றால் என்ன என்பதை தமிழ் ரசிகர்களுக்கு அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி அனைவரிடமும் பிரபலமானதற்கு கமலஹாசன் தொகுத்து வழங்குவதும் ஒரு காரணமாக அமைந்தது.

ஆனால் தமிழை விட ஹிந்தியில் பல வருடங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்துள்ளனர். அதன் பிறகு கர்நாடகாவில் 24 மார்ச் 2013 ஆண்டு பின்பு தமிழில் ஸ்டார் விஜய் டிவியில் 25 ஜூன் 2015 ஆம் ஆண்டு மற்றும் தெலுங்கில்16 ஜூலை 2017 ஆம் ஆண்டு அதன்பிறகு மலையாளத்தில் 24 ஜூன் 2018 ஆம் ஆண்டு அடுத்தடுத்த மாநிலங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்தனர்.

தற்போது அனைவரிடமும் தோன்றக் கூடிய ஒரு விஷயம் என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் யார் சிறப்பாக தொகுத்து வழங்குகிறார் என்பதுதான். அதுமட்டுமில்லாமல் நேர்மையான முறையில் சண்டை சச்சரவுகளை பற்றி பேசி சுமுகமான முறையில் தீர்ப்புக் கூறுவது யார் .?

பிக் பாஸ் தமிழ்: பிரபல தொலைக்காட்சி விஜய் டிவியில் ஒளிபரப்பானது ஒரு பக்கமாக இருந்தாலும் அதனைத் தொகுத்து வழங்குவது நம்மளுடைய உலகநாயகன் கமலஹாசன் தான்.

கமல்ஹாசனை பற்றி சொல்லவே தேவையில்லை பேச்சில் அவரை அடித்துக் கொள்வதற்கு இனி ஒருவர் தமிழில் பிறந்து தான் வரவேண்டும். அந்த அளவிற்கு தனது பேச்சு திறமையின் மூலம் எதிர் நிற்பவர்களின் வாயை மூட வைத்து விடுவார். தவறு செய்வது யாராக இருந்தாலும் யார் என்பதே பார்க்காமல் சுகமாக கேள்வி கேட்டு அவர்களின் தவறை சுட்டிக் காட்டி விடுவார் என தமிழ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

big-boss-kamal
big-boss-kamal

பிக் பாஸ் ஹிந்தி: பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் முதலில் அறிமுகமானது ஹிந்தி மக்களுக்கு மட்டும் தான். ஏனென்றால் வட நாட்டில் தான் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியை பாலிவுட் சூப்பர் ஸ்டார் என கூறும் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இவரது தொகுப்பினைப் பற்றி பலரும் பலவிதமாக கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

salman-khan-bb
salman-khan-bb

பிக்பாஸ் கன்னடம்: இடிவி எனும் தொலைக்காட்சி மூலம் நான் ஈ படத்தில் நடித்த சுதீப் பிக்பாஸ் தொகுப்பாளராக செயல்பட்டு வருகிறார். இவரும் கன்னட மொழியில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கன்னட மக்கள் கூறி வருகின்றனர்.

sudeep
sudeep

பிக் பாஸ் தெலுங்கு: ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், நானி மற்றும் நாகர்ஜுனா போன்ற மூவரும் தொகுத்து வழங்கியுள்ளனர். இதில் யார் சிறப்பாக தொகுத்து வழங்குவார் என்பதை நீங்கள் நினைக்கிறீர்கள்.

naga-arjun-bb
naga-arjun-bb

பிக்பாஸ் மலையாளம்: மலையாள திரை உலகில் மிகப்பெரிய நடிகரான மோகன்லால் தான் ஏசியன் நெட் எனும் தொலைக்காட்சியின் மூலம் மலையாள பிக்பாஸ் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தொகுப்பினை பற்றி உங்கள் கருத்து.

mohan-lal-bb
mohan-lal-bb

தற்போது நான்கு மொழிகளிலும் உள்ள சூப்பர் ஸ்டார்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி உள்ளனர். ஆனால் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார் என்பதில் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பல மொழி மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்த்து வருவதால் சிறப்பாக தொகுத்து வழங்குவது யார் என்பதை நீங்களே கமெண்ட் செய்யுங்கள்.