Sports | விளையாட்டு
அவுட் கேட்டதற்கு மூக்கைச் சொறிந்த அம்பயர்.. சிரிப்பை அடக்க முடியாமல் தவித்த ரசிகர்கள் வீடியோ
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை போலவே பலரும் தங்களது நாடுகளில் லீக் போட்டிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் வருட வருடம் ஆஸ்திரேலியாவில் பிக் பாஸ் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் அம்பயர் ஒருவர் செய்த செயல் பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் மற்றும் அடிலைட் ஸ்ட்ரைக் ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட் செய்த அடிலைட் அணி 20 ஓவர் முடிவில் 155 ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து 156 ரன்களை சேஸ் செய்த மெல்போர்ன் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பறிகொடுத்தது. 17வது ஓவரில் தான் அம்பயரின் அந்தக் கூத்து நடைபெற்றுள்ளது. 17வது ஓவரை வீச வந்தார் ரஷீத் கான்.
இவர் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட் அப்பீல் செய்தார். அதற்கு அம்பயர் டேவிட்சன், அவுட் கொடுப்பதைப் போலவே கையை தூக்கி விட்டு திடீரென மூக்கைச் சொறிந்து நாட் அவுட் கொடுத்து விட்டார்.
சிறிது நேரம் விக்கெட் விழுந்த மகிழ்ச்சியில் இருந்த ரஷித் கான், அம்பயரின் இந்த செயலைப் பார்த்து பயங்கரமாக சிரித்தார். வர்ணனையாளர்கள் முதல் பார்வையாளர்கள் வரை விழுந்து விழுந்து சிரித்த இந்த காட்சியை பிக்பாஸ் லீக் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
👃☝️ @rashidkhan_19 was celebrating while the umpire was having a scratch. But the @StrikersBBL star believes the right call was made in the end #nosegate @BKTtires | #BBL09 pic.twitter.com/xu4ZmWkjlR
— KFC Big Bash League (@BBL) December 30, 2019
