புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

முக்கியமான 2 நடிகர்கள் இல்லாமல் ரெடியாகும் ஜெய்லர் 2.. மேஜர் பிரச்சனையால் ட்ரீட்மெண்ட் போகும் நரசிம்மா

ஜெய்லர் 2.ஆம் பாகம் 2025 மார்ச் மாதத்தில் இருந்து சூட்டிங் ஆரம்பிக்கவிருக்கிறது. இதற்கிடையே டிசம்பர் 12 ரஜினி பிறந்த நாள் அன்று இந்த படத்திற்கான ஒரு ப்ரோமோ வெளியாகிறது. முழு ஸ்கிரிப்ட்டையும் ரெடி பண்ணிய நெல்சனுக்கு இப்பொழுது பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

ஜெய்லர் 2வில் இரண்டு முக்கிய நடிகர்கள் இல்லை என்பதை முதல் பார்ட்டை வைத்து கணித்து விடலாம். ஆனால் மேலும் பின்னடைவாக முக்கியமான நடிகர் ஒருவர் இந்த படத்தில் இருப்பாரா என்பது இப்பொழுது கேள்விக்குறியாகிவிட்டது. முதல் பாகத்தில் அவர் தான் ரஜினிக்கு தூண் போல் நின்று குடும்பத்தை காப்பாற்றுவார்.

வில்லன் விநாயகம் முதல் பாகத்தில் இறந்து விடுவார். வர்மன் கதாபாத்திரத்தில் சிலை திருடும் கும்பலின் தலைவனாக நடித்த இவர் ரஜினிக்கு அடுத்தபடியாக படத்தை தூக்கி நிறுத்தியவர். இப்பொழுது இவர் இரண்டாம் பாகத்தில் இருக்க வாய்ப்பில்லை. அதேபோல் முதல் பாகத்தில் காவாலையா பாட்டுக்கு நடனமாடிய தமன்னாவும் இதில் இல்லை.

இப்படி இரண்டு முக்கியமான நடிகர்கள் இரண்டாம் பாகத்தில் இல்லை. ஆனால் மேலும் பின்னடைவாக முதல் பாகத்தில் நரசிம்மா கதாபாத்திரத்தில் நடித்த சிவராஜ்குமார் இரண்டாம் பாகத்தில் இருப்பாரா என்பது தான் இப்பொழுது கேள்விக்குறியாகி உள்ளது. ரஜினிகாந்த் சிவராஜ் குமார் மற்றும் மோகன்லால் இருவருக்கும் இரண்டாம் பாகத்தில் நிறைய காட்சிகள் அமைக்கும்படி நெல்சனிடம் கூறியிருந்தார்.

கன்னடா சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு உடம்பளவில் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம். அதனால் ஆறு மாத காலம் அவர் ட்ரீட்மென்ட்காக அமெரிக்கா செல்ல உள்ளார். இதுதான் அங்கே பெரிய பூதாகரப் பிரச்சனையாக வெடித்து வருகிறது. அவர் கமிட் செய்து வைத்திருந்த நிறைய படங்களை கைவிட்டு விட்டார்.

- Advertisement -

Trending News