Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸ் போட்டியாளர்களின் திறமையை வெட்டவெளிச்சம் போட்டு காமித்த நெட்டிசன்கள்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
கடந்த 5 வாரங்களும் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
எனவே இந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கிய 18 போட்டியாளர்களின் பங்களிப்பையும் ஒரு அட்டவணையின் மூலம் தனித்தனியாக விளக்கப்பட்டுள்ளது
தற்போது இந்த அட்டவணையை அடங்கிய புகைப்படமானது பிக்பாஸ் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதில் ஆஜித், சனம், பாலாஜி அவர்களின் செயல்பாடுகள் ரசிகர்களுக்கு எரிச்சலூட்டுவதாக தெரிகிறது. மேலும் அர்ச்சனா, ரம்யா பாண்டியன் ஆகிய இருவரையும் பிக்பாஸ் ரசிகர்கள் அதிகம் விரும்புவதாக தெரிகிறது.
அதுமட்டுமில்லாமல் சம்யுக்தா, ரியோ, நிஷா, கேப்ரில்லா, அனிதா ஆகியோரின் பங்களிப்பு பிக்பாஸ் வீட்டில் அதிகரித்துக் கொண்டு வருவதாக ரசிகர்களின் நினைக்கின்றனர்.
மேலும் சிவானி, சுசித்ரா, ரமேஷ் ஆகியோரின் ஆகியோரின் திறமை குறைவாக வெளிப்படுகிறது.
எனவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேகா, வேல்முருகன், சுரேஷ் ஆகியோரின் கடைசி இரண்டு வாரம் பிக்பாஸ் வீட்டின் பங்களிப்பு மிகக் குறைவாக உள்ளதாக அந்த புகைப்படத்தின் வாயிலாக தெரிகிறது.

bb4-chat-cinemapettai
இப்படி பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 18 பேறுகளையும் புட்டுப்புட்டு வைத்த இந்த அட்டவணை ஆனது பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.
