ஐ.பி.எல் டி.20 தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் இந்திய வீரர் புவனேஷ்குமார் 100 விக்கெட்டுகளை  கைப்பற்றியுள்ளார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் வீரர் புவனேஷ்வர் குமார் 19 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். ஐ.பி.எல். போட்டியில் அவரது சிறந்த பந்துவீச்சு இதுவாகும்.

மேலும் 5 விக்கெட் எடுத்ததன் மூலம் புவனேஷ்வர் குமார் ஐ.பி.எல்.லில் 100-வது விக்கெட்டை தொட்டார். 81 ஆட்டத்தில் 297.5 ஓவர்கள் வீசி 2078 ரன்கள் கொடுத்து 100 விக்கெட் வீழ்த்தினார்.

100 விக்கெட்டை எடுத்த 9-வது வீரர் புவனேஷ்வர் குமார் ஆவார். மலிங்கா (147 விக்கெட்), அமித் மிஸ்ரா (129), பிராவோ (122), பியூஸ் சாவ்லா (122), ஹர்பஜன் சிங் (122), ஆசிஷ் நெக்ரா (103), வினய்குமார் (101), அஸ்வின் (100) ஆகியோருக்கு அடுத்து நிலையில் புவனேஷ்வர்குமார் உள்ளார்.