ஹிப்ஹாப் ஆதியுடன் இணையும் பூமிகா பட நடிகை! குட்டி சமந்தாவின் அடுத்த பட அப்டேட்!

விஜய் டிவி மற்றும் நெட்பிளிக்ஸில் வெளியான பூமிகா படமானது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. இந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மாதுரி ஜெயின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். பூமிகா திரைப்படம் இயற்கையை மனிதர்கள் சீரழிக்க கூடாது என்ற மையக்கருத்தை வெளிப்படுத்தும் திகில் நிறைந்த திரைப்படமாக இருந்தது.

இந்தப் படத்திற்குப் பிறகு ரசிகர்கள் பலர் மாதுரி ஜெயினை ‘குட்டி சமந்தா’ என்று அழைக்க தொடங்கிவிட்டனர். ஏனென்றால் இவர் ஒரு சாயலில் சமந்தா போன்று தெரிகிறார். ஆனால் மாதுரி ஜெயினுக்கு குட்டி சமந்தா என்று அழைப்பதை விட அவரது பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது தான் பிடித்திருக்கிறதாம்.

ஏனெனில் அவருடைய ஒரிஜினாலிட்டி வெளியே தெரிய வேண்டுமென்று விரும்புகிறாராம். தற்போது மாதுரி ஜெயின் ஹிப்ஹாப் ஆதியுடன் ‘சிவக்குமார் சபதம்’ என்ற புது படத்தில் கமிட்டாகி உள்ளாராம். பூமிகா திரைப்படத்திற்காக முன்களப்பணியில் ஈடுபட்டபோது தான்,

இயற்கையைப் பற்றிய புரிதல் மாதுரி ஜெயினுக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே பூமிகா படத்திற்குப் பிறகு மாதுரி ஜெயின் இயற்கையின் மீது அதிக பிணைப்புடன் இருப்பதாகவும்,

madhuri-jain
madhuri-jain

வீட்டில் செடி மற்றும் மரங்களை நட்டு வளர்ப்பதில் அதிக ஆர்வம் செலுத்துவதோடு, இயற்கைக்கு எந்த கேடும் விளைவிக்கக் கூடாது என்பதில் திட்டவட்டமாக இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

எனவே பூமிகா படத்திற்கு பிறகு மாதுரி ஜெயினுக்கு அதிக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஆகையால் இனி வரும் படங்களில் மாதுரி ஜெயினை அதிகம் காணும் வாய்ப்பு உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்