பூமிகா

ரோஜா கூட்டம், பத்ரி, ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் பூமிகா. ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நடிகை பூமிகா. பின்னர் 2007 ஆம் ஆண்டு திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டு ஒதுங்கினார்.

Bhumika Chawla-Family
Bhumika Chawla

தமிழில் பிரபு தேவாவுடன் களவாடிய பொழுதுகள் படத்தில் நடித்தார். மேலும் ஹிந்தியில் தோனி படத்தில் அவரின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்தார். அதே போல் தெலுங்கிலும் நானி – சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி உள்ள எம்சிஏ படத்தில் குணச்சித்ர ரோலில் நடித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  வலைதளங்களில் கிண்டல் செய்தால் நடவடிக்கை..! விஷால் மிரட்டல்.. விஷாலை கிழித்த நெட்டிசன்கள்

யூ டர்ன்

samantha u turn

கன்னடத்தில் 2016-ஆம் ஆண்டு விக்ரம் வேதா படப்புகழ் ‘ஷ்ரத்தா ஸ்ரீநாத்’ நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் ‘யூ டர்ன்’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட ஹாரர் – த்ரில்லர் ஜானர் படம். இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். கன்னடத்தில் ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய பவன் குமாரே இதனை இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் ரெடியாகிறது.

இப்படத்தில் ஆதி , ராகுல் ரவீந்திரன் முக்கிய ரோலில் நடிக்கிறார்கள். இப்படத்தில் தான் பூமிகா தற்பொழுது இணைந்துள்ளாராம். கன்னட வெர்ஷனில் ராதிகா சேட்டன் என்பவர் நடித்திருந்த கேரக்டரில் பூமிகா நடிக்கவிருக்கிறாராம்.

அதிகம் படித்தவை:  நீ மூடு மொதல்ல, வந்துட்டாருப்பா மோடிக்கு தம்பி: ரஜினி ரசிகர்களுக்கு கஸ்தூரி பதிலடி
Bhumika- – Nani — MCA

பாலம் ஒன்றில் சிறிது தூரம் சென்று வளையாமல், பாதையை விளக்கி u turn எடுத்ததனால் ஏற்படும் விபரீத ஆக்சிடெண்ட்டை மையப்படுத்தும் கதை தான் இப்படம். அந்த விபத்தில் உயிர் இழுக்கும் 4 வயது குழந்தையின் தாய் கதாபாத்திரம் தான் பூமிகாவுடையது, மேலேயும் படத்தில் ஆவியாக வந்து பலரையும் கொலை செய்யவாராம் அவர். வெகு விரைவில் ஸ்ட்ரிக் முடிந்த பின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் பற்றிய தகவல்கள் வெளியாகும்.