Videos | வீடியோக்கள்
உலக அரசியலை மிரட்டும் ஜெயம் ரவியின் பூமி பட டீசர்.. உழைப்பாளர் தினத்திற்கு பிளாக்பஸ்டர் ரெடி
ஜெயம் ரவியின் கோமாளி படம் ஒரு சில சர்ச்சைகளுடன் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. 2019-ன் அதிக லாபம் ஈட்டிய படம் ஜெயம் ரவியின் கோமாளி என்றே கூறலாம்.
அதன்பின் ஜெயம் ரவியின் 25-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தலைப்புடன் வெளிவந்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியுடன் வெளிவந்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார், காமெடி கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பூமி படம் மே 1ம் தேதி வெளிவரும் என்று தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் மற்றும் டைட்டில் வைத்து பார்க்கும்போது விவசாயத்தை மையமாக வைத்து இப்படம் எடுத்திருக்கிறார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
காலையிலிருந்து ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த பூமி படக்குழுவினர்,தற்போது 15 நிமிடம் கழித்து வெளியிடுவது தொழில் சாமர்த்தியம். ரசிகர்கள் இதனால் பெரும் டென்ஷன் ஆகி தற்போது டீசரை பார்த்த பின் கூல் ஆகிவிட்டனர்
சற்று நொடிகளுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களை இன்னும் உசுப்பேத்தி உள்ளது.
