பாவனா கடத்தலுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று மலையாள நடிகர் சித்தார்த் பரதன் தெரிவித்துள்ளார்.

நடிகை பாவனா படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் காரில் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்டார். பாவனாவை ஆள் வைத்து கடத்தியது மலையாள நடிகர் சித்தார்த் பரதன் என்ற பேச்சு கிளம்பியது.

இந்நிலையில் இது குறித்து பரதன் கூறியிருப்பதாவது,

நடிகை பாவனா விஷயத்திற்கு நான் தான் காரணம் என்று பலரும் என்னை கை காட்டுவது அதிர்ச்சியாக உள்ளது. எங்கிருந்து தான் இது போன்ற பொய்யான செய்திகள் கிளம்பி பரவுகின்றது என்றே தெரியவில்லை.

நடிகைக்கு நடந்த கொடுமைக்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ள நாங்கள் எல்லாம் ஆவலோடு இருக்கும்போது நானும் ஒரு குற்றவாளி என்று தகவல் பரவியுள்ளது.

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பற்றி சரியான நேரத்தில் விளக்கம் அளிப்பேன் என பரதன் தெரிவித்துள்ளார். பரதன் பிரபல மலையாள நடிகை கே.பி.ஏ.சி. லலிதாவின் மகன் ஆவார்.

முன்விரோதம் காரணமாக தனக்கு நெருக்கமான பல்சர் சுனிலை ஏவி பாவனாவை மானபங்கப்படுத்தி நடிகர் திலீப் பழிதீர்த்துக் கொண்டார் என்று முதலில் கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டை திலீப் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.