Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாவனா கடத்தல் வழக்கில் பல்டி அடித்த பிரபல தமிழ் நடிகை.. தோழியாக இருந்து துரோகியாக மாறிய கொடுமை
மலையாள சினிமாவை சேர்ந்த பாவனா நான்கு பேரால் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்ட செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
ஒரு நடிகைக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பெண்மணிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என முன்னணி நடிகைகள் முதல் பெண்கள் வரை பலரும் பாவனாவுக்கு சப்போர்ட் செய்து வந்தனர்.
அந்த பிரச்சனைக்கு பிறகு பாவனாவுக்கு திருமணமாகி குழந்தையே பிறந்து விடும் போல. ஆனால் இன்னமும் அந்த கேஸ் கோர்ட்டில் அங்கும் இங்கும் முடிவு கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் பாவனா வழக்கில் அவருக்கு ஆதரவாக நடிகை ரம்யா நம்பீசன் மற்றும் ரீமா கலிங்கல் போன்ற தமிழ் பிரபலங்கள் ஆதரவாக இருந்தனர். அதேபோல் இன்னொரு தமிழ் நடிகையும் ஆதரவாக இருந்தார்.
தமிழ் நடிகைகள் என்று சொல்வதைவிட தமிழ் படங்களில் நடித்தவர்கள் என்று சொல்லலாம். இந்நிலையில் திடீரென திலீப்புக்கு ஆதரவாக சாட்சியை மாற்றி கூறியுள்ளார் நடிகை பாமா.
தமிழில் சேவற்கொடி எனும் படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த செயல் பல நடிகைகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதற்கு காரணம் மலையாள சினிமாவில் பட வாய்ப்புகள் வராமல் போய்விடும் என்ற பயம் தானாம்.

bhama-actress-cinemapettai
திலீப் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் என்பதும், பாவனாவின் மீதிருந்த கோபத்தால் ஆட்களை ஏவி விட்டதாகவும் அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
