Connect with us
Cinemapettai

Cinemapettai

நான் 16 வயது இருக்கும்போது இப்படி ஒரு வதந்தியை பரப்பிய மீடியா – கண்ணீருடன் பாவனா பேட்டி

Bhavana

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நான் 16 வயது இருக்கும்போது இப்படி ஒரு வதந்தியை பரப்பிய மீடியா – கண்ணீருடன் பாவனா பேட்டி

கடந்த மாதம் தனக்கு நேர்ந்த கொடும் நிகழ்வுகளின் தாக்கத்தில் இருந்து நடிகை பாவனா கிட்டத்தட்ட வெளியே வந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தனது காதலருடன் திருமண நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்ட பாவனா, தான் ஏற்கனவே நடிக்க ஒப்பந்தமாகி இருந்த படங்களில் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த சம்பவம் பற்றி கேட்பார்களே என்றெல்லாம் நினைத்து அவர் மீடியாக்களில் இருந்து ஒதுங்கவும் முயற்சிக்கவில்லை. அந்தவகையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளாராம் பாவனா.

பாவனா சினிமாவில் 15 வயதில் அடியெடுத்து வைத்தார். ஆனால் நடிக்க ஆரம்பித்த அடுத்த வருடத்தில் இருந்தே கிசுகிசுக்கள் அவரை துரத்த ஆரம்பித்து விட்டன. இது அனைத்து நடிகைகளும் சந்திப்பதுதான் என்றாலும் அவரை அதிகமாக பாதித்தது அவர் அபார்ஷன் பண்ணிக்கொண்டார் என அவ்வப்போது கிளம்பும் வதந்திகள் தான்.. “நான் 16 வயதே ஆன பெண் என்பதைகூட நினைக்காமல் அவர்களால் எப்படி வதந்திகளை கிளப்ப முடிகிறது. அவர்கள் குடும்பத்திலும் என் வயதுப்பெண் ஒருத்தி இருந்திருப்பாள் இல்லையா..?” என தன்னை அதிகம் பாதித்த வதந்தி பற்றி பேசினாராம் பாவனா

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top