Tamil Cinema News | சினிமா செய்திகள்
காரில் கடத்தி பாவனா பலாத்காரம் செய்த கேசில் திடீர் திருப்பம்.. தண்டனை கிடைக்கும் நேரத்தில் நடிகர் செய்த சேட்டை!
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் நடிகை பாவனா(Bhavana). தமிழில் ஜெயம் ரவியுடன் இவர் நடித்த தீபாவளி படம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் வரவேற்பை பெற்று வருகிறது.
மலையாளத்திலும் மிக முக்கிய கதாநாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில் பாவனாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு திடீரென சிலர் பாவனாவை காரில் கடத்தி கொண்டு போய் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
மேலும் அவற்றை செல்போனில் படம் பிடித்து மிரட்டியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உடனடியாக ஆறு மாதத்திற்குள் வழக்கை முடித்துவிட வேண்டுமென உச்சநீதிமன்றம் சார்பில் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் மிக முக்கிய குற்றவாளியாக மலையாள முன்னணி நடிகர் திலீப் சேர்க்கப்பட்டார். திலீப் தான் கூலிப்படையை ஏவி பாவனாவை இந்த மாதிரி செய்யச் சொன்னதாக தகவல் கிடைத்தது.
இதற்காக கிட்டத்தட்ட 85 நாட்கள் ஜெயில் சென்று வந்துள்ளார். இந்நிலையில் விரைந்து இந்த வழக்கை முடிக்கும் வகையில் பல நடிகர்கள் நடிகைகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் பிரபல தமிழ் நடிகை ரம்யா நம்பீசன் இடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. நடிகர் திலீப்புக்கு எதிராக ரம்யா வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் பல நடிகைகள் திலீப்புக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தது அவர் மீதான குற்றத்தை நிரூபிக்கும் வகையில் அமைந்து வருகிறது.
ஏழு வருட கடுங்காவல் தண்டனை கிடைக்க இருந்த நிலையில் திடீரென இந்த வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதனால் திலீப் சம்பந்தப்பட்டவர்கள் நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தினார்களா எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
