மலையாளத்தில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்படும் படங்கள் அனைத்து படங்களும் வெற்றிபெறுவதில்லை ஒரு சில படங்களே வெற்றி பெறுகிறது, எப்படி இருந்தாலும் படத்தை சரியாக ரீமேக் செய்யவேண்டும் இல்லையென்றால் சொதப்பைலாகிவிடும், ரீமேக் படத்தில் ரசிகர்கள் கதை, கதாபாத்திரத்தின் பின்னணி, என பல விஷயங்களை கவனிப்பார்கள் மேலும் தமிழ் படம் போல் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள்.

baskar

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் ஒரு கமர்ஷியல் படம், படத்தின் கதையானது இது ஒரு மலையாள படத்தின் ரீமேக் ஆம் மம்முட்டி, நயன்தாரா நடித்த “பாஸ்கர் தி ராஸ்கல்” படத்தை தான் தமிழில் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” என எடுத்துள்ளார்கள் இதில் மம்முட்டி கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும், நயன்தாரா கதாபாத்திரத்தில் அமலா பாலும் நடித்துள்ளார்கள்.

படத்தில் அரவிந்த் சாமி தன் மனைவியை இழந்து தனது மகனுடன் வசித்து வருகிறார், அதேபோல் நடிகை அமலா பாலும் கணவரை இழந்து மகளுடன் வசித்து வருகிறார், இவர்கள் இருவருமே வசதியானவர்கள் அரவிந்த் சாமி மகன் மாஸ்டர் ராகவ், அமலா பால் மகள் பேபி நைனிகா, இந்த இரு குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள் இருவரும் நண்பர்கள்.

அரவிந்த்சாமி மகனுக்கு அம்மா இல்லாததால் அமலா பாலை ரொம்பவும் பிடிக்கும் அதேபோல் அமலா பால் மகளுக்கு அப்பா இல்லாததால் அரவின் சாமியை மிகவும் பிடிகிறது, இதனால் பேபி நைனிகா தன்னை புரிந்து கொள்ள வில்லை என மிகவும் வேதனை படுகிறார் அமலா பால், தனது கணவனை நினைத்தும் வேதனை படுகிறார் அமலா பால்.

படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான குழந்தைகள் நைனிகாவும், ராகவும் எல்லா சினிமாக்களை போலவும் குழந்தை நட்சத்திரம் செய்யும் பெரிய மனுஷதனமான வேலையை இவர்களும் செய்கிறார்கள், முதலில் அமலா பால் அரவிந்த்சாமி காதலை நிராகரித்து விடுவார் பின்பு, தனது அம்மாவை நண்பனின் அப்பாவிடம் சேர்த்து வைக்க மிகவும் போராடுகிறார் நைனிகா, தனது அபாவுக்கு மேனர்ஸ் என்றால் என்ன என்பதை பாடம் எடுக்கிறார் ராகவா இருவரின் நடிப்பும் அருமையாக இருக்கிறது, அரவிந்த்சாமி அமலாபால் இருவரையும் சேர்த்து வைக்க ராகவா நைனிகா இருவரும் இணைந்து வைக்க பல முயற்சி எடுக்கிறார்கள் இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து விட்டால் ஒரே வீட்டில் இருக்கலாம் என முடிவெடுக்கிறார்கள்.

அரவிந்த்சாமி அமலா பால் இருவரும் ஒன்றாகா வாழ சம்மதம் ஆகும் பொழுது இத்றந்து விட்டதாக நினைத்த அமலாபால் கணவர் உயிருடன் வருகிறார் அதன் பின் இருவரும் இணைகிறார்களா இல்லையா என்பது தான் மீதி கதை.

படத்தில் பரோட்டா சூரி மற்றும் ரோபோ ஷங்கர் காமெடியில் அசத்தியுள்ளார்கள், அரவிந்த சாமி படத்தில் பல பலவென சட்டை காடன் வெட்டி முறுக்கு மீசை என மாஸ்ஸான கெட்டப்பில் நடித்து அசத்தியுள்ளார், ஆனாலும் இவரை சாக்லேட் பாய் போல் தான் பார்க்க தோனுகிறது பல ரசிகர்களுக்கு, அமலா பால் ஒரு பெண்ணுக்கு தாயாக இருந்தாலும் படம் முழுவதும் கவர்ச்சி உடையில் வளம் வருகிறார், இவரின் நடிப்பும் மிகவும் பாராட்ட பட வேண்டியது தான், அரவிந்த்சாமி படத்தில் ஒரு முரட்டு ராஸ்கல் தான், பொழுது போகவில்லையா பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை பார்த்து வாருங்கள். பாஸ்கர் ஒரு ராஸ்கல் பொழுது போக்கு திரைப்படம்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல்:   3 / 5