Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் அதே பிரச்சனை… கடுப்பான அரவிந்த் சாமி

அரவிந்த் சாமி நடிப்பில் வெளியீட்டிற்கு தயாரான பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் மீண்டும் தள்ளிப்போய் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

வேறு மொழியில் வெற்றி பெற்ற ரீமேக் படங்களை மற்ற மொழிகளில் இயக்குவது வாடிக்கையாகி விட்டது. அதிலும், மாஸ் ஹிட் அடித்த மலையாள படங்களை தமிழில் தொடர்ச்சியாக ரீமேக் செய்து வருகின்றனர். அப்பட்டியலில் புதிதாக இணைந்து இருப்பது பாஸ்கர் ஒரு ராஸ்கல். மலையாளத்தில் பாஸ்கர் தி ராஸ்கல் என்ற பெயரில் வெளியான இப்படத்தை சித்திக் இயக்கி இருந்தார். மம்முட்டி, நயன்தாரா ஜோடி போட்டு இருந்தனர். தற்போது, அப்படம் தமிழில் தயாராகி இருக்கிறது. மம்முட்டி வேடத்தில் அரவிந்த் சாமியும், நயன்தாரா வேடத்தில் அமலா பாலும் நடிக்கின்றனர். ஒரிஜினல் வெர்சனை இயக்கிய சித்திக்கே இப்படத்தை இயக்குகிறார். அம்ரீஷ் படத்திற்கு இசையமைக்கிறார். தெறி நைனிகா, சேதுபதி ராகவ் ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இதனை ‘ஹர்ஷினி மூவீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் படத்தின் வெளியீட்டிற்கு ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். பொங்கல் தின ரேஸில் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், வசூலை காரணம் காட்டி தள்ளிப்போனது. அடுத்து மார்ச் 29ம் தேதி படத்தின் ரிலீஸ் குறிக்கப்பட்டது. பிறகு காரணம் சொல்லாமல் அதை ரத்து செய்தனர். இப்படி இப்படம் இதுவரை 4 முறை தள்ளிப்போய் இருக்கிறது. இன்று கடும் போட்டியுடன் இப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அதிர்ச்சியான தகவலை அரவிந்த் சாமி தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது. மிகவும் அதிகமான அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்ற பிறகும் கூட படம் வெளியாவது தள்ளிப்போனதற்கு எந்தக் காரணமும் தெரியவில்லை. இதற்கு நான் மன்னிப்பு மட்டும் தான் கேட்க வேண்டும். எப்போதும் படத் தயாரிப்பாளருக்கு நான் உறுதுணையாகவே இருந்துள்ளேன்.

உங்களைப் போன்று நானும் படத்திற்காக காத்திருக்கிறேன். இப்படம் எப்போது ரிலீஸாகும் என்பதை என் ட்விட்டரில் இனி குறிப்பிடமாட்டேன். எப்போது வெளியானாலும் இப்படத்தை பார்க்கும் போதும் நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். என்பதை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். என் படக்குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ரிலீஸ் ஆகும் மற்ற படங்கள் பெரும் வெற்றிபெற வாழ்த்துவதற்கான வாய்ப்பாக இதை எடுத்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top