விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் வில்லியான வெண்பா உடன் பாரதி தங்க முடிவெடுத்து தன்னுடைய மகள் ஹேமாவுடன் வெண்பா வீட்டிற்கு சென்றபோது, கண்ணம்மா பக்கா ப்ளான் போட்டு அவர்களை மீண்டும் சௌந்தர்யா வீட்டிற்கு வர வைக்கிறார். எனவே வரும் வழியில் பாரதி நடுரோட்டில் காரை நிறுத்தி வைத்துக் கொண்டு, தனக்குத் தானே பேசி புலம்புகிறார்.
ஏனென்றால் கண்ணம்மாவிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக பாரதி ஆறு மாதம் சேர்ந்து வாழ வேண்டும் என்பதால், சௌந்தர்யா வீட்டில் இருந்தால் கண்ணம்மாவுடன் சேர்ந்து இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது அதை செய் என்று அவருடைய அம்மா சௌந்தர்யா எச்சரிக்கிறார். இதனால் வீட்டை வெறுத்து நண்பரான வெண்பா வீட்டிற்கு சென்றால் கண்ணம்மா அங்கும் இருக்க விடாமல் செய்கிறாளே என்று பாரதி புலம்புகிறார்.
தன்னிடம் ஏகப்பட்ட பணம் நாலு ஐந்து வீடு, நாலஞ்சு கார், சொந்தமாக மருத்துவமனை, இந்த சமுதாயத்தில் பெருமையாக சொல்லிக் கொள்ளும் டாக்டர் என்கின்ற வேலை இதெல்லாம் இருந்தும் என்னால் நிம்மதியாக ஒரே இடத்தில் இருக்க முடியாமல் நடுரோட்டில் என்னுடைய மகள் உடன் நின்று கொண்டிருக்கிறேன் என்று பாரதி தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறார்.
இதனைப் பார்த்த ஹேமா காரிலிருந்து வெளியே வந்து பாரதியை சமாதானப்படுத்தி மீண்டும் சௌந்தர்யா வீட்டிற்கு அழைத்துக்கொண்டு செல்கிறார். இதன்பிறகு கண்ணம்மா வீட்டிற்கு சென்றிருக்கும் சௌந்தர்யாவிடம் லட்சுமி தன்னுடைய அப்பாவை, அம்மா பிறந்த நாளன்று பார்க்க போகிறேன் என்று கூறி சௌந்தர்யாவிற்கு ஷாக் கொடுக்கிறார்.
பாரதி என்ற பெயர் மட்டுமே தன்னுடைய அப்பாவை பற்றி தெரிந்த நிலையில், அவருடைய குரல் எப்படி இருக்கும் என அம்மாவின் பிறந்தநாளுக்கு வரும் அப்பாவை எண்ணி லட்சுமி கனவு கண்டு கொண்டிருக்கிறார். அத்துடன் இந்த விஷயத்தை லட்சுமி ஹேமாவுக்கு தெரியபடுத்த உடனே, ஹேமா பாரதியிடம் சொல்லுகிறார்.
இதை பாரதி கேட்டதும் கண்ணம்மாவின் பிறந்தநாளுக்கு சென்றால், லட்சுமியின் அப்பாவாக கண்ணம்மா யாரை சொல்லப் போகிறார் என்பதை பார்ப்பதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறார். ஆனால் கண்ணம்மா லட்சுமியிடம் ‘டாக்டர் அங்கிள் என்று நீ நினைக்கிற ஹேமாவின் அப்பா பாரதி தான் உன்னுடைய அப்பா’ என்பதை சொல்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.