Connect with us

Cinemapettai

பாரதிராஜா இயக்கத்தில் ஹீரோவாகும் பிரியாணி கடை ஓனர்.. தெறிக்க போகும் தமிழ் சினிமா

bharathi-raja

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாரதிராஜா இயக்கத்தில் ஹீரோவாகும் பிரியாணி கடை ஓனர்.. தெறிக்க போகும் தமிழ் சினிமா

தமிழ் சினிமாவை வேறு ஒரு பாதைக்கு மாறியது என்று சொன்னால் அது பாரதிராஜா இயக்குனராக வந்த பிறகுதான்.

அதற்கு முன்பு வரை ஒரே மாதிரியான கதை வட்டாரங்களில் சிக்கிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றார்.

பெரும்பாலும் பாரதிராஜா தன்னுடைய படங்களில் புதுமுக நடிகர்களை அறிமுகப்படுத்துவதில் மிகவும் ஆர்வமாக இருந்தவர்.

bharathi-raja-cinemapettai

bharathi-raja-cinemapettai

அப்படிப்பட்ட பாரதிராஜா இயக்கத்தில் சென்னையில் பிரபல ஹோட்டல் நிறுவனர் ஒருவர் ஹீரோவாக நடிக்க இருக்கும் செய்தி தான் தமிழ் சினிமாவை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது.

சென்னையில் மிகவும் பிரபலமான பிரியாணி நிருவனமாக வலம் வருவது சேலம் ஆர்ஆர் பிரியாணி. இந்த நிறுவனத்தின் ஓனர் தமிழ்ச்செல்வன்.

சில காலத்திற்கு முன்பு பாரதிராஜா தமிழ் செல்வனை வைத்து ஒரு படத்தை இயக்க இருந்தாராம். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த படத்தை கைவிட்டதாக சேலம் ஆர்ஆர் பிரியாணி கடை ஓனர் தமிழ்ச்செல்வன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

வருங்காலத்தில் இந்த படம் உருவாக வாய்ப்பு இருக்கிறதாம். ஏற்கனவே சரவணா அண்ணாச்சி ஹீரோவாக களம் இறங்கிய நிலையில் தமிழ்ச்செல்வனும் அதற்கான வேலையில் இறங்கிவிட்டாராம்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top